இந்தியாவில் சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமான மாநிலங்களில் ஒன்று மத்தியப் பிரதேசம். அங்கிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், கலைச்சிற்பங்கள், கோட்டைகள், அரண்மனைகள் உள்ளிட்டவைகளை பார்க்க இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும்இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாதந்தோறும் வந்து செல்கின்றன. அது மட்டுமல்லாமல் வனவிலங்குகள் இருக்கும் தேசிய பூங்காக்களும் இருக்கின்றன. இந்த பூங்காவில் அரிதான பல விலங்குகள் இருக்கின்றன. அவற்றை பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று. ஆனால், அண்மையில் சுற்றுலா சென்ற பயணிகளுக்கு காணக் கிடைக்காத அனுபவம் ஒன்று கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பென்ச் புலிகள் சரணாலயத்தில் பிளாக் பான்ந்தர் எனப்படும் கருஞ்சிறுத்தையை சுற்றுலாப் பயணிகள் பார்த்துள்ளனர். பல மாதங்கள் மற்றும் வருடக் கணக்கில் இந்த விலக்கை பார்க்க முயற்சி செய்பவர்களுக்கு மத்தியில், அண்மையில் சுற்றுலா சென்ற பயணிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வீடியோவில் சில வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிகளுக்குள் சென்றுள்ளனர். ஓர் இடத்தில் மட்டும் அவர்கள் நிறுத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அவர்கள் சென்ற அந்த பகுதியில் இருக்கும் பாதையைக் கடந்து கருஞ் சிறுத்தை ஒன்று செல்கிறது.



அந்த சிறுத்தையை பார்த்தவுடன் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர். டிவிட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ மட்டும் இதுவரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கிறது. நேரில் பார்த்தவர்கள் மட்டுமல்லாது டிவிட்டரில் பார்த்த நெட்டிசன்களும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதில், கருஞ்சிறுத்தையை பார்க்கும் வாய்ப்பு கிடைத்து பெரு மகிழ்ச்சி. இந்த வாய்ப்பு பலமுறை முயற்சித்த எனக்கு நேரில் செல்லும்போது கிடைக்கவில்லை. இப்போது கிடைத்த, இணையத்தில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.  


மேலும் படிக்க | வனத்துறையினர் செயலால் குட்டியை பாதுகாக்க தலைதெறித்து ஒடும் தாய் யானை!


மேலும் படிக்க | முதலைகளுக்கு இடையில் மாஸ் காட்டும் பெண்: வாய் பிளக்கும் நெட்டிசன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ