Funny Dance Video: இப்படி ஒரு கியூட்டான வீடியோவை பார்த்திருக்க முடியாது. சிறுவர்களின் அழகான நடன வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் கியூட் வீடியோ இது. ஆப்பிரிக்க சிறுவர்கள் இந்தி திரைப்பட பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தை கலக்கிவருகிறது. இணையத்தில் இந்த வீடியோவை பார்க்கும் இணையவாசிகள், இந்த சிறுவர்களின் ரசிகர்களாகவே மாறிவிட்டார்கள். அவர்களின் ஆற்றலை இணைய உலகம் தொடர்ந்து பார்க்க விரும்புகிறது. இதற்கு முன்னதாகவும் பல இந்திய பாடல்களுக்கு ஆடும் நடன வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி டஃப் ஃபைட் கொடுத்துக் கொண்ஃபு இருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். உலகின் பல மூலைகளில் நடக்கும் சுவாரசியமான, சுவையான, வித்தியாசமான, விசித்திரமான நிகழ்வுகளை தினமும் சமூக வலைத்தளங்களில் காண்கிறோம். இணையத்தில் நடனங்கள் மற்றும் பாடல்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்புவதுண்டு.


மேலும் படிக்க | கியூட் டான்ஸ், செம எக்ஸ்பிரஷன்: இணையத்தை கலக்கும் சிறுமியின் மெட்ரோ ரயில் டான்ஸ்


பல பயனர்கள் தங்கள் அசத்தலான நடனங்களின் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் இந்த இந்திப் பாடலுக்கான ஆப்ரிக்க சிறுவர்களின் டான்ஸ் வீடியோ.


சமூக ஊடகங்களில் வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு இதுபோன்ற வீடியோக்கள் புத்துணச்சியை கொடுக்கின்றன. நடனக் குழு நிகழ்ச்சியின் சில பகுதிகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது. அதில் கலா சஷ்மா என்ற பாடலுக்கான வீடியோ வைரலானது. அது தலைப்புச் செய்திகளையும் உருவாக்கியது. மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது.


மேலும் படிக்க | சுட்டிக் குழந்தையின் பாம்பு விளையாட்டு! பார்த்தாலே பகீர் என பயப்படுத்தும் வீடியோ 


இப்போது, ​​அந்த வீடியோவை நீங்களும் பார்த்து பரவசம் ஆகுங்கள்...



ஒரு ஆப்பிரிக்க நடனக் குழுவினர் கலா சஷ்மா நடனப் போக்கில் குதித்துள்ளனர். உற்சாகமான பாடலுக்கு உணர்ச்சியைத் தூண்டும் நடனத்தை ஆடி பார்ப்பவர்களின் மனம் கவர்கின்றனர் இந்த சிறுவர்கள். 


மேலும் படிக்க | ‘தொட்டு தொட்டு விளையாடலாமா?' மீனை கொஞ்சும் பூனை: வைரல் வீடியோ


வீடியோவில், பல சிறுவர்கள் நடனமாடினாலும், முதலில் ஒரு சிறுவன் முன்னால் நின்று ஆடுகிறான். சிறிது நேரத்தில் அவன் பின்னே செல்ல, மற்றொருவர் வந்து ஆடுகிறார். இரண்டாவதாக வந்து முன்னணியில் ஆடிய சிறுவன் பின்னால் போனதும், மற்ருமொரு சிறுவன் வந்து ஆடுகிறான். நண்பர்கள் குழுவாக ஆடினாலும், அவர்கள் ஆட்டம் ஒன்றுபோல இருக்கிறது.  


இந்த வீடியோவை ஏவியேட்டர் அனில் சோப்ரா என்ற பயனர் வெள்ளிக்கிழமை (2022 ஆகஸ்ட் 22) ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கிளிப்பில், உகாண்டாவைச் சேர்ந்த குழந்தைகள் இந்திப் பாடலுக்கு சூப்பராக நடனம் ஆடுவதைப் பார்க்கலாம்.


இந்த டான்ஸைப் பார்க்கும்போது, ஆச்சரியத்தில் வாயடைந்துப் போய், கண்கள் விரிய வீடியோவை  பார்க்க வேண்டி இருக்கிறது. நேற்று வெளியான வீடியோ ஒரே நாளில், 22 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும் ஒன்றரை லட்சத்திற்குக்ம் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.  


மேலும் படிக்க | 'அட கெரகமே!!’: பெண்ணிடம் பல்பு வாங்கிய முதலை, கலாய்க்கும் இணையவாசிகள், வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ