மாணவிகளின் Prank-ல் சிக்கிய பேராசிரியர்! அவரது ரியாக்சன் இணையத்தில் வைரல்!
பெங்களூருவில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தங்கள் பேராசிரியரை கிண்டல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பெங்களூருவில் அமைந்துள்ள கிறிஸ்ட் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் பேராசிரியரை கேலி செய்ய முடிவு செய்தனர். மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த பேராசிரியரின் ரியாக்சன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. தற்போது வரை இந்த வீடியோ 40 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி உள்ளது. இன்ஸ்டாகிராமில் 'Psych B' என்ற கணக்கில் இருந்து "Pokie பேராசிரியர்" என்ற தலைப்பில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. வகுப்பில் பேராசிரியர் ஒருவர் பாடம் நடத்த தொடங்குகிறார். அப்போது பேராசிரியரின் கவனத்தை ஈர்க்க மாணவிகள் குழு ஒன்றாக சேர்ந்து தங்களுக்குள் வாக்குவாதம் செய்வது போல் நடித்தனர்.
இதனையடுத்து, பேராசிரியர் அவர்களிடம் சென்ற போது இந்த Prank நடைபெற்றது. இறுதியில் பெரிதாக கோபமோ, எரிச்சலோ அடையாத அந்த பேராசிரியரின் ரியாக்சன் வைரல் ஆகி வருகிறது. மாணவிகள் எதற்காக சத்தம் இடுகின்றனர் என்று அவர்களுக்கு அருகில் என்று கேட்கிறார். அதற்கு ஒரு மாணவி, “Sir, You is Sleep? or You can Sleep? இந்த இரண்டில் எந்த வாக்கியம் சரியானது என்று கேட்கிறார். பேராசிரியரும் "You can Sleep" என்று அவர் பதிலளித்தபோது, அனைத்து மாணவிகளும் தங்கள் மேசைகளில் தலையை வைத்து தூங்க தொடங்கினர். ஒரு நொடி என்ன நடக்கிறது என்று புரியாத பேராசிரியர், பின்பு புரிந்து கொண்டு “என்ன இது? எதுவும் சமூக பரிசோதனை செய்கிறீர்களா?" என்று மாணவர்களுடன் சேர்ந்து சிரிக்கத் தொடங்கினார்.
பிறகு மாணவர்களில் ஒருவர் வீடியோ எடுப்பதை கண்டுபிடித்த பேராசிரியர் அவர்களுடன் உட்கார்ந்து சிரித்தபடி, “நானும் ரீலில் இருக்கிறேனா? வணக்கம் நண்பர்களே!” என்று பேசினார். பேராசிரியர் மாணவர்களுடன் இப்படி அன்பாக இருப்பது பார்ப்போரின் மனதை வென்றுள்ளது. மேலும் சில மாணவர்கள் தங்கள் ஆசிரியரிடம் இதேபோன்ற கேலி செய்து விளையாடும் மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரல் ஆக தொடங்கி உள்ளது.
மேலும் படிக்க | ‘ஏம்மா அந்த பக்கமா போம்மா’.... எருமையை கடுப்பேற்றிய பெண்ணின் டான்ஸ்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ