நடிகை திரிஷாவின் புதிய கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிகை திரிஷா இணைவதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிக்கவுள்ள திரிஷா, இப்படத்தில் ரஜினி-யின் ஜோடியாக நடிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியானது. 


காலா, கபாலி உள்ளிட்ட சமீபத்திய திரைப்படங்களில் புதிய தோற்றத்துடன் தோன்றி ரஜினிகாந்த் இப்படத்தில் எப்படி தோன்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நடிகை திரிஷாவின் புது தோற்றம் வெளியாகியுள்ளது.



தனது நீளமான முடியினை வெட்டிக்கொண்டு புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றினை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது 96 திரைப்படத்தின் பணிகளை முடித்துள்ள இவர், தான் அடுத்து ரஜினி-யுடன் நடிக்கவுள்ள திரைப்படத்திற்கான புதிய கெட்டப்பாக தான் இந்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார் என இணைய ரசிகர்கள் தகவல்களை பரப்பி வருகின்றனர்.