அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அட்லாண்டாவில் நடைபெற்ற கல்லூரி கால்பந்து தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அலபாமா மற்றும் ஜார்ஜியா அணிகளுக்கு இடையே கால்பந்துப் போட்டி நடந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அட்லாண்டாவில் ட்ரம்புக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் கல்லூரி வாசலில் ஒரு குழுவினர் ட்ரம்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



விளையாட்டு மைதானத்துக்குள் நுழைந்ததும் அனைவருக்கு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக ட்ரம்ப் ஃபீல்டில் இறங்கி, காவலர்களுக்கு இடையில் நின்று கொண்டார். பின்னர் தேசிய கீதம் ஒலிக்கும்போது, தன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு பாடத் தொடங்கினார். அந்தக் காட்சியை வீடியோ எடுத்து அங்கிருந்த ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்துவருகின்றனர்.


இதை பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காரணம் என்னவென்றால் தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருக்கும்போது கொஞ்சம்கூட தொடர்பில்லாமல் ட்ரம்ப் வாய் அசைத்துக் கொண்டிருந்ததுதான். ‘வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொட்டியுள்ளார்’ என்று ட்ரம்ப்பை அமெரிக்க மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 


தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதிக்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சிக்குச் செல்வதற்கு முன்னராக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதுதான் ஆச்சர்யம்.



Video taken From  ABC News.