உலகக்கோப்பை தொடரின் வங்கதேச அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் அந்தணியின் பீல்டிங்கை டோனி சரி செய்த வீடியோந தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி என்ன செய்தாலும் அது டிரண்டாகிவிடுகிறது. அந்த வகையில் நேற்றைய பயிற்சி ஆட்டத்தின் போது எதிரணியான வங்க தேச அணி பந்துவீச்சாளரை நிறுத்தி அணியின் பீல்டிங்கை சரி செய்துள்ளார். 


ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸின் 40-வது ஓவரை வங்கதேச அணியின் பந்து வீச்சாளரான ஷபிர் ரஹ்மான் வீச வந்த நிலையில் அவரது ஓவரை எதிர்கொள்ள டோனி தயாராக இருந்தார். அப்போது பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு ஓடி வந்த போது, பந்து வீச்சாளர் கூறிய லெக் சைடில் நிற்கவைக்கப்பட்ட வீரர், பீல்டிங் செட் செய்யப்பட்ட இடத்தில் நிற்கவில்லை.


இதனை உற்று கவனித்த டோனி, பந்துவீச்சாளரை உடனடியாக நிறுத்தி, அதை சுட்டிக்காட்டினார். இதனை ஒப்புக்கொண்ட பந்துவீச்சாளர் உடனடியாக முதலில் சொன்ன இடத்தில் நிற்குமாறு பீல்டரை அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.



உலக கோப்பை தொடரின் முதல் போட்டி நாளை துவங்குகிறது. முன்னதாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 10 அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டங்கள் நடைப்பெற்றது. அந்த வகையில் வங்க தேசம் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நேற்று நடைப்பெற்றது. 


இப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது., இதனைத்தொடர்ந்து 360 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்க தேச அணி ஆட்டத்தின் 49.3-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 264 ரன்கள் மட்டுமே குவித்தது.