பிரபல இடுகளை வலைதளமான twitter-ல் #WhyIJoinedTwitter என்னும் ஹாஷ்டேக் தற்போது வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய காலக்கட்டத்தில் கைப்பேசி என்பது நம் கையின் ஆறாவது விரலாக மாறிவிட்டது. இந்த கைப்பேசிகளுக்கு கொடுக்கும் மதிப்பினை கூட தன் குடும்பத்தாருக்கு கொடுப்பதில்லை இக்கால இளசுகள்... ஆனால் இந்த கைப்பேசியும் ஒரு நாள் தன் மதிப்பை இழக்கும் நாள் என்றால், அது facebook, twitter போன்ற வலைதளங்கள் செயலிழக்கும் நாள் தான். 


உணவை மறந்தாலும் மறப்போம் சமூக வலைப்பக்கங்களை மறக்க மாட்டோம் என்னும் அளவிற்கு தான் இன்றைய காலநிலை உள்ளது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இந்த இணைய பக்கங்களுக்கு அடிமையாகிவிட்டதை யாராலும் மறுக்க இயலாது. 



இந்நிலையில் தற்போது பிரபல இடுகை வலைதளமான twitter தங்கள் பயனர்களிடம் ‘நீங்கள் ஏன் twitter-ல் சேர்ந்தீர்கள்?’ (#WhyIJoinedTwitter) என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


இந்த கேள்விக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் பதில்களை சுவாரசியமான முறையில் அளித்து வருகின்றனர். இதன் காரணமாக நேற்று இரவு முதல் twitter-ல் #WhyIJoinedTwitter என்னும் ஹாஷ் டேக் பிரபலமாகி வருகின்றது!


twitter-ன் கேள்விக்கு பயனர்களின்சுவாரசிய பதில்கள் சில...