மக்களவை தேர்தல் வருவதை முன்னிட்டு தேர்தலை குறிக்கும் வகையில் 12 மொழிகளில் emoji வெளியிட்டுள்ளது Twitter India!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாராளுமன்ற கட்டிடத்தின் புகைப்படத்தை கொண்டு வெளியாகியுள்ள இந்த emoji, இந்தி, ஆங்கிலம், பெங்காளி/அசாமி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. 


இந்த emoji-னை பயன்படுத்த விரும்பும் ட்விட்டர் பயனர்கள் தங்களது பதிவின் போது கீழ்காணும் ஹாஸ்டேகினை பயன்படுத்தல் அவசியம் ஆகும்.


#LokSabhaElections2019, #IndiaDecides2019, #IndiaElections2019,  #लोकसभाचुनाव2019, #লোকসভানিৰ্বাচন, #લોકસભાચૂંટણી, #ಲೋಕಸಭೆಚುನಾವಣೆ, #ലോക്സഭാതെരെഞ്ഞെടുപ്പ്, #लोकसभानिवडणूक, #ଲୋକସଭାନିର୍ବାଚନ, #ਲੋਕਸਭਾਚੋਣਾਂ, #நாடாளுமன்றதேர்தல்,#లోక్‌సభఎన్నికలు, and لوک_سبھا_انتخابات#



மேலும் இந்த emoji ஆனது வரும் மே 31, 2019-ஆம் நாள் வரை பயன்பாட்டில் இருக்கும் எனவும் ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது.



இந்திய தேர்தல் ஆணையம் ஆனது @ECISVEEP என்னும் ட்விட்டர் கணக்கின் வாயிலாக தேர்தல் விதிமுறைகள், நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு கற்பித்து வருகிறது. தேர்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் இணைய இடுகை வழியை கையில் எடுத்துள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உதவும் வகையில் ட்விட்டர் இந்தியா இந்த பாராளுமன்ற ஹேஷ்டேகுகளை அறிமுகம் செய்துள்ளது.


---மக்களவை தேர்தல் 2019---


நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது, முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் சேர்த்து நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது.