லக்னோ: மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று, அவருக்கு மரியாதை செலுத்திய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் ராட்டை சுற்றினார்.  காந்தி ஜெயந்தியன்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் ராட்டை சுற்றும் புகைப்படங்களை போட்டு, நக்கலடிக்கும் சமூக ஊடக பதிவர்கள், பெண்களைப் பாதுகாப்பதிலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் முதலமைச்சரின் தோல்வி அகிம்சையாக வெளிப்படுகிறது என்று கேலி செய்கின்றனர்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாக, தலித் பெண்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைக் குற்றங்கள் நடைபெற்று வருவது வெளிச்சத்துக்கு வந்ததால், உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவது குறித்து மாநில அரசும், காவல்துறையும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.  


முதலமைச்சரை நக்கலடிக்கும் டிவிட்டர் பயனர்கள், பெண்களைப் பாதுகாப்பதிலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் முதலமைச்சர் எவ்வாறு தோல்வியுற்றார் என்றும் அலசுகிறார்கள். அது மட்டுமல்ல, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவின் பெயரை மீரட் நகருக்கு வைக்க வேண்டும் என்று இந்து மகாசபையினரின் நீண்ட நாள் கோரிக்கையையும், தேசத்தந்தையின் பிறந்த நாளன்று நிறைவேற்றலாமே என்று நையாண்டியும் செய்கின்றனர்.  


மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட ஜனவரி 30ஆம் தேதியை தியாகிகள் தினமாக இந்து தீவிரவாத வலதுசாரி குழுக்கள் ஆண்டுதோறும் அனுசரிககின்றன. சாத்வி பிரக்யா உட்பட பாஜகவின் பல உறுப்பினர்கள் கோட்சேவை ஒரு ‘உண்மையான தேசபக்தர்’ என்று பகிரங்கமாக கூறுகின்ற்னர்.


கடந்த ஆண்டு பேசிய சாத்வி பிரக்யா, “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர், ஒரு தேசபக்தராக இருந்தார், அவர் என்றும் தேசபக்தராகவே இருப்பார். அவரை ஒரு பயங்கரவாதி என்று அழைக்கும் மக்கள் விஷயத்தை ஆழமாக பார்க்க வேண்டும். அத்தகையவர்களுக்கு இந்த தேர்தல்களில் பொருத்தமான பதில் வழங்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.


ட்விட்டரில் உத்தரப்பிரதேச முதலமைச்சரை வாரித் தூற்றும் பதிவுகள்: