குறும்புத்தனம் மனிதர்களிடம் மட்டுமல்ல, விலங்குகளிடமும் இருக்கும். ஆனால் அடிக்கடி அதனை நம்மால் பார்க்க முடியாது. மிகுந்த உற்சாகமாக இருக்கும் சமயங்களில் விலங்குகள் இயல்பை மறந்து ஜாலியாக சேட்டை செய்யும். அந்த குறும்புத் தனங்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் அதிசயமே. ஒரு சில சமயங்களில் அந்த வாய்ப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பதபதைக்க வைக்கும் முதலைகளின் சண்டை: கேமராவில் கைதாகி வைரலான வீடியோ


அப்படி வாய்ப்பு கிடைத்த ஒருவர் நாய்கள் செய்யும் சேட்டையை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.  அந்த வீடியோவில் இரண்டு நாய்க்குட்டிகள் உள்ளன. மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் நாய்கள், வீட்டில் தொங்க விடப்பட்டிருக்கும் நூல்களை பிடித்து ஊஞ்சலாடுகின்றன. 



அதற்காக ஒரு டேபிள் மீது ஏறி தொங்கிக் கொண்டிருக்கும் நூலை லாவகமாக ஜம்ப் செய்து வாயால் கவ்வி பிடிக்கின்றன. அப்படி பிடித்து ஜாலியாக ஊஞ்சலாடுகின்றன. முதலில் ஒரு நாய்க்குட்டி நூலை பிடித்து ஊஞ்சலாடுகிறது. மற்றொரு நாய் முயற்சி செய்தும், நூலை சரியாக பிடிக்க முடியவில்லை. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து தொங்கிக் கொண்டிருக்கும் நூலைப் பிடிப்பதுடன், மற்றொரு நாயின் மீது தாவிக் கொள்கிறது. அந்த நிலையிலேயே இரண்டு நாய்களும் ஜாலியாக ஊஞ்சலாடுகின்றன. இந்த வீடியோ காண்போரை ரசிக்க வைத்துள்ளது. 


மேலும் படிக்க | ஒற்றைக் கையில் டேபிள் டென்னிஸ் விளையாடும் வீரர் - வைரல் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR