முடியாது எனும் எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே முடமானவர்கள், மற்றவர்கள் யாரும் முடமானவர்கள் இல்லை என பலர் நிரூபித்துள்ளனர். முயற்சி செய்பவர்களுக்கு உடல் ஊனம் என்பது ஒரு பொருட்டல்ல. மனதில் மட்டுமே ஊனம் இருக்கக்கூடாது என ஆண்டாண்டு காலமாக வாழ்கையில் வெற்றி பெற்றவர்கள் நிரூபித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | சிக்கிய பாம்பை காப்பாற்றிய பொதுமக்கள்: நெகிழ வைக்கும் வீடியோ
பிறப்பால் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், ஆரோக்கியமாக இருப்பவர்கள் செய்ய முடியாத விஷயங்களைக் செய்து அசத்தியுள்ளனர். கின்னஸ் உள்ளிட்ட ரெக்கார்டு புத்தகங்களில் இடம்பிடித்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் கை, கால்களை இழந்தவர்கள் வெற்றி பெற்று தங்கப்பதக்கங்களை வென்று இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் முயற்சி என்ற ஒன்றை மட்டுமே தங்களின் மந்திரமாக கொண்டு பயிற்சி செய்ததால் உலகத்தின் முன்னால் சாதனையாளர்களாக நிற்க முடிந்தது.
அப்படி சாத்தித்தவரை பற்றியா பேசுகிறோம் என்றால் இல்லை. ஆனால், கை உடைந்த நிலையிலும், இவர் அசால்டாக டேபிள் டென்னிஸ் விளையாடுகிறார். அவர் விளையாடுவது பெரிதாக பலருக்கு ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம். கடைசியாக அவர் செய்யும் ஒரு செயல் தான் இந்த வீடியோவின் ஹைலைட். வைரலாகியிருக்கும் இந்த வீடியோவில் பொறுமையாக ஒற்றைக் கையில் விளையாடும் அந்த வீரர், கடைசியாக டேபிள் டென்னிஸ் விளையாடும் பேட்டை சரியாக தூக்கி வீசி பந்தை எதிர்பக்கம் கோலாக மாற்றுகிறார். இது தான் இந்த வீடியோவின் ஹைலட். அவரின் இந்த செயல் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் படிக்க | நாயிடம் கண்ணாமூச்சி ஆடிய பூனை! வைரல் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR