ஆடுகள், சேவல் போன்றவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகளை நாம் கண்டு ரசித்திருப்போம்.  சேவல் மற்றும் ஆடுகளின் சண்டைகளுக்காகவே சில இடங்களில் விழாக்கள் நடத்தப்படுவதுண்டு, இந்த சண்டைகளில் வெற்றி பெறுவதற்காகவே பலரும் ஆடுகளுக்கு முறையான பயிற்சி அளித்து வளர்ப்பார்கள்.  சேவல் சண்டை மற்றும் ஆடுகள் சண்டை பலருக்கும் பிடித்தமான ஒன்று, இதனை காண பலரும் கூடுவார்கள்.  அதேபோல இரு ஆடுகள் குழந்தைகள் விளையாடும் சீசாவில் ஏறிக்கொண்டு முட்டிக்கொள்ளும் காட்சி தான் இணையவாசிகளை கவர்ந்து இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தன் குட்டிகளுக்கு சாப்பாடு வைத்ததற்காக தாய்க்கு நன்றி சொன்ன நாய்!


ட்விட்டரில் பல விலங்குகளின் அறிய காட்சிகளை பார்வையாளர்களுக்கு வழங்கும் 'யோக்' என்ற ட்விட்டர் கணக்கில் தான் இந்த ஆடுகளின் காட்சியும் பதிவிடப்பட்டு இருக்கிறது.  இந்த வீடியோவில், ஒரு பரந்த புல்வெளி நிறைந்த இடத்தில் கருப்பு நிறத்தில் சீசா ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.  அந்த கருப்பு நிற சீசாவில் மேல் அதன் இரண்டு முனையிலும் இரண்டு கருப்பு நிற ஆடுகள் எதிரெதிரே நின்றுகொண்டு இருக்கிறது.  அவை இரண்டும் ஒன்றுகொன்று தலையால் முட்டிக்கொள்கிறது, அவை மீண்டும் மீண்டும் உற்சாகத்தோடு ஒன்றையொன்று முட்டிக்கொண்டு விளையாடுகிறது.


 



இந்த வீடியோ இணையத்தில் பலரையும் ரசிக்க செய்துள்ளது.  இந்த வீடியோவுடன் 'ஆடுகள் சீசாவில் விளையாடுகின்றன' என்கிற கேப்ஷனும் பதிவிடப்பட்டு உள்ளது.  இணையத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்துள்ள இந்த வீடியோவிற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.  ஒரு பயனர் 'இது பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளது' என்று கூறியுள்ளார், மற்றொருவர் 'இது மகிழ்ச்சியளிக்கிறது' என்றும் கூறியுள்ளார்.  இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை பலரும் ரசித்து வைரலாக்கி வருகின்றனர்.


மேலும் படிக்க | சிங்கத்துடன் மோதும் வரிக்குதிரை; வல்லவன் வாழ்வான் என்பது இது தானோ..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR