சாலை விபத்து என்பது கொடூரமானது. சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பலரது குடும்பங்கள் பாதிக்கின்றன. சாலையில் பயணிக்கும்போது எப்போது கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், மித வேகம் மித நன்று. இல்லையென்றால், உயிர் துறக்க நேரிடும். வாழ் நாள் முழுவதும் வாட்டி வதைக்கும் ஏதேனும் ஒரு பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக, குழந்தைகளிடம் வண்டியை கொடுக்கக்கூடாது. 18 வயதுக்குட்பட்ட நபர்களை சாலையில் வண்டி ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால் அவர்களது பெற்றோர் சிறை செல்ல நேரிடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறார்கள் ஏற்படுத்திய விபத்தில், குழந்தைகளின் பெற்றோர் சிறை தண்டனை பெற்ற சம்பவங்களும் இருக்கின்றன. ஒரு சில சமயங்களில் மட்டுமே சுவாரஸ்யமாக விபத்தில் இருந்து எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பித்தவர்கள் சிலர் இருக்கின்றனர். அப்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியிருக்கிறது. வாகனம் ஓட்டி வரும் நபர், சந்திப்பு சாலையில் எந்த புறமும் பார்க்கமால் வருகிறார். அப்போது, மெயின் சாலையில் வேகமாக ஒரு இருச்சக்கர வாகனம் வருவதை பார்த்தவுடன் இவருக்கு பையம் ஏற்பட்டு வாகனத்தை கீழே போட்டுவிடுகிறார். அந்த நொடி நேரத்தில் சாலையில் வேகமாக வந்த வாகனம் இவருடைய வாகனத்தின் மீது மோதி நிற்கிறது.



இதில் இருவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அடுத்த உடனே வாகனத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் சாலையில் திரும்ப முயற்சிக்கும்போது, மீண்டும் கவனக்குறைவாக பேருந்து வருவதை பார்க்காமல் சென்று அதன் மீது மோதுகிறார். அடுத்தடுத்து இரு விபத்துகளில் சிக்கியும் அந்த வாகன ஓட்டிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகியிருக்கிறது. இது குறித்து இணையத்தில் கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன் ஒருவர், "இவன் போற ரூட்ல மட்டும் போயீடாதீங்க மக்கா" என காமெடியாக கூறியுள்ளார். 


மேலும் படிக்க: இது பாம்பு தாம்மா! இப்படி பயமில்லாம போறியே? காலைச் சுற்றிய பாம்பு வீடியோ வைரல்


மேலும் படிக்க: ராட்சத சிலந்திகளுடன் அசால்டாய் விளையாடும் சிறுமி: ஷாக் ஆன நெட்டிசன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ