ராட்சத சிலந்திகளுடன் அசால்டாய் விளையாடும் சிறுமி: ஷாக் ஆன நெட்டிசன்கள்

Viral Video: சிலந்தியுடன் விளையாடியதுண்டா? சிலந்தி என்றாலே அனைவரும் ஓட்டம் பிடிக்கும் நிலையில், அவற்றுடன் அசால்டாய் விளையாடும் சிறுமியின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 30, 2022, 06:20 PM IST
  • சிலந்தியுடன் விளையாடும் சிறுமி.
  • ஷாக் ஆன இணையவாசிகள்.
  • வைரலான வீடியோ.
ராட்சத சிலந்திகளுடன் அசால்டாய் விளையாடும் சிறுமி: ஷாக் ஆன நெட்டிசன்கள் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் அதிகம் வெளியிடப்படுகின்றன. அருகில் சென்று பார்க்க முடியாத இந்த விலங்குகளை வீடியோக்கள் மூலமாக காண மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். எனினும், இப்படிப்பட்ட உயிரினங்களை மிக அசால்டாக கையாளும் சிலரும் இருக்கின்றனர். அவர்களது வீடியோக்களும் இணையவாசிகளை வியக்க வைக்கின்றன. 

அப்படி, அனைவரும் அருகில் இருக்க விரும்பாத ஒரு உயிரினம் சிலந்தி. சிலந்தி என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது பயம்தான்! பாம்புகள் மற்றும் சிலந்திகள் போன்ற உயிரினங்கள் உடனடியாக பெரும்பாலான மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றை பார்ப்பதே நமக்கு பீதியை கிளப்பும், தொடுவதை பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. 

மேலும் படிக்க | Cute Viral Video: என்னை விடு... நான் வரமாட்டேன்... அடம் பிடிக்கும் வாத்து குஞ்சுகள்! 

சமீபத்தில், ஒரு சிறுமி பிரம்மாண்டமான சிலந்திகளுடன் விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி மக்களை திகைக்க வைத்துள்ளது. சிலந்தியைக் கண்டால் பெரும்பாலான குழந்தைகள் அலறி அடித்துக் கொண்டு ஓடிவிடுவார்கள். ஆனால், வீடியோவில் சிறுமி ஒரு பெரிய சிலந்தியுடன் பயமின்றி விளையாடுவதைக் காண முடிகின்றது. அவர் சாதாரணமாக சிலந்திகளை கையில் எடுக்கிறார். மேலும், தனது முதுகிலும் ஊர்ந்து செல்ல அனுமதிக்கிறார். அவரது நடவடிக்கையை பார்த்தால் இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போல தோன்றுகிறது. 

இந்த வீடியோ Best Videos என்ற ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. "திஸ் ஸ்பைடர் கேர்ள்" என இதற்கு கேப்ஷன் அளிக்கப்பட்டுள்ளது. 

சிறுமி சிலந்திகளுடன் அசால்டாய் விளையாடுவதை இந்த வீடியோவில் காணலாம்: 

அந்த பெண் சிலந்திகளுடன் பயமின்றி விளையாடுவதை பார்த்து நெட்டிசன்கள் திகைத்துப் போயுள்ளனர். இந்த சிறுமியின் தைரியத்தையும் துணிச்சலையும் அனைவரும் பாரட்டி வருகின்றனர். பகிரப்பட்டதிலிருந்து, வீடியோ 176 K வியூஸ்களையும் 600 க்கும் மேற்பட்ட ரீ- ட்வீட்களையும் பெற்றுள்ளது. ஒரு பயனர், "அவள் விரைவில் ஸ்பைடர் வர்சை வழிநடத்துவாள் !!!" என எழுதியுள்ளார். மற்றொருவர், “ஓஹ்ஹ்ஹ் ஹெல்ல் நூஓஓஓ !!!” என்று வியந்துள்ளார். மற்றொரு பயனர், “நான் சிலந்திகளை வெறுக்கிறேன். அவர்களைப் பற்றி நினைத்தாலே எனக்கு உடம்பு சிலிர்க்கும்” என தன் அனுபவத்தை கூறியுள்ளார். தன் துணிச்சலால் இந்த சிறுமி இணையவாசிகளின் இதயத்தை வென்றுவிட்டார் என்றே சொல்லலாம்!!

மேலும் படிக்க |ஓடிய மாப்பிள்ளை, துரத்திய மணப்பெண்: காரணம் என்ன? வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News