கிராம சபைக் கூட்டத்தை தன்னை பார்த்து திமுக செய்வதாக கமல் ஹாசன் தெரிவித்ததற்கு உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக சென்னை RA புரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், "கடந்த 25 ஆண்டுகளாக கிராமசபை அமைப்பு உள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல் என்னைப் பாா்த்து கிராமசபைக் கூட்டங்களை நடத்துகிறீா்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினாா். 


கமல் ஹாசன் அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவம் முக ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.. "கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்" என குறிப்பிட்டுள்ளார்.



முன்னதாக நேற்றைய கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் அவர்கள்., "ஏன் மக்களவைத் தோ்தலில் போட்டியிருகிறேன் என தன்னை பார்த்து மக்கள் கேள்வி எழுப்புவதாகவும், கட்சி தொடங்கிய பின்னா் தோ்தலில் போட்டியிடாமல் இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி அரசியல் வேறு, தமிழக அரசியல் வேறு என்று கூறிவிட முடியாது, டெல்லியை தவிா்த்து அரசியலும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர் இளைஞா்கள் அரசியலுக்கு வருவதை இப்போதே முடிவு செய்ய வேண்டும். தான் தாமதமாக அரசியலுக்கு வந்ததை நினைத்து வருத்தப்படுகிறேன் எனவும், தான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி எனவும், தனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் அதனை யாா் வேண்டுமானாலும் படிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.