இது என்ன மாயமா இல்லை மந்திரமா... மலை ஆட்டிடம் தோற்றுப் போன புவி ஈர்ப்பு விசை...!
மலை ஆடு புவி ஈர்ப்பு விசையை தோற்கடிக்கும் வகையில், செங்குத்தான அணையின் சுவர் மீது, மிக அசால்டகா நடப்பதைக் காணலாம்.
வைரல் வீடியோ: இணையத்தில் வைரலாகும் பல வீடியோக்களில் காட்டப்படும் சில விஷயங்கள் உண்மையிலேயே மிகவும் நம்ப முடியாததாக இருக்கின்றன. பல வீடியோக்கள் அரிய தகவல்களை வழங்கும் களமாக சமூக ஊடகங்கள் இருக்கின்றன. இங்கே பதிவிடப்படும் பல வீடியோக்கள் மூலம் நம்மை சுற்றி உள்ள உலகை நாம் நன்றாக புரிந்து கொள்ளலாம். அவ்வப்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன. தற்போதும் அது போன்ற, வேடிக்கையான, சுவாரசியமான வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது. அந்த வகையில் ஒரு மலை ஆடு ஒன்று தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
மலை ஆடு புவி ஈர்ப்பு விசையை தோற்கடிக்கும் வகையில், செங்குத்தான அணையின் சுவர் மீது, மிக அசால்டகா நடப்பதைக் காணலாம். இத்தாலியில் ஆன்ட்ரோனா பள்ளத்தாக்கில் உள்ள இயற்கை பூங்காவில் ஒரு அணை உள்ளது. அதில் மலை ஆடுகள் என்றும் அழைக்கப்படும் சில காட்டு ஆல்பைன் ஐபெக்ஸ் ஆடுகள் தான் அற்புதமான சாதனைகளை செய்கின்றன. மலை ஆடுகள் அணையின் செங்குத்துச் சுவர்களில் ஏறுவதை பார்த்தால், இவைகளுக்கு இப்படி புவி ஈர்ப்பு விசையை தாண்டி, கீழே விழாமல் மிக லாவகமாக ஏற முடிகிறது என்பதைக் காணலாம்
வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:
மலை ஆடுகள், இபை உயிரை பணயம் வைத்து ஏறிவதற்கான காரணம், இன்னும் ஆச்சர்யப்படுத்தும், ஆடுகள் புவியீர்ப்பு விசையையும், இறப்பையும் எதிர்க்கத் தயாராக இருப்பதற்குக் காரணம், இந்தக் கற்களில் காணப்படும் தாது உப்பு படிவுகள்தான். அவை அவற்றின் ஊட்டச்சத்து உட்கொள்ளலின் அவசியமான பகுதியாகும். அதனால் தான் அவற்றை பெறுவதற்காக அவை சுவர்களை அளவிடுகின்றன.
இணையத்தில் வைரலாகும் பல வீடியோக்களில் காட்டப்படும் சில விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. பல வீடியோக்கள் அரிய தகவல்களை வழங்கும் பொக்கிஷங்களாகவும் இருக்கின்றன. தற்போதும் அது போன்ற, வேடிக்கையான, சுவாரஸ்யமான வீடியோக்கள் தான் இணையத்தை கலக்கி வருகின்றது.
சமூக ஊடகங்களில் தின தினம் பெரும்பாலானோர், தங்கள் நேரத்தை வீடியோக்களைப் பார்ப்பதிலும், ட்ரோல்களைப் படிப்பதிலும் செலவிடுகிறார்கள். தனிமை, கவலை மற்றும் மன அழுத்தத்தை போக்கும் நேரம் இது. தற்காலிக நிவாரணம் பெற இது போன்ற வீடியோக்கள் உதவுகின்றன. அதனால் தான் தினமும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் உறுதி செய்யவோ, பரிந்துரைக்கவோ இல்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ