Viral Video: இப்படி ஒரு மாமியார் எனக்கு இல்லையே என பொறாமைப்பட வேண்டாம்!
இந்த வைரல் வீடியோவைப் பார்த்து, இப்படி ஒரு மாமியார் எனக்கு இல்லையே என பொறாமைப்பட வேண்டாம்!
தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அவற்றில் மிகவும் வித்தியாசமானவை வைரலாகின்றன. ஆனால் சாதாரண வீடியோக்கள் கூட வைரலாவது அதிசயமாக இருக்கும்.
ஆனால், அப்படி வைரலாகும் வீடியோவுக்கு பின்னால் ஒரு கதை இருக்கும். உதாரணமாக தற்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு வீடியோ மாமியார் ஒருவர் தனது மருமகளின் புடவையை சரி செய்துவிடும் வீடியோ.
இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் அவர்களை நேசிக்கிறார்கள், மாமியார் மெச்சிய மருமகளா? இல்லை மருமகளை, தனது சொந்த மகளைப் போல நினைக்கும் அருமையான மாமியாரா என அனைவரின் புருவங்களும் உயர்கின்றன.
உண்மை தான், மாமியார்-மருமகள் உறவு அனைத்து உறவுகளிலும் சிக்கலானது என்பது எல்லா காலங்களிலும் நிரூபணம் ஆகும் நிதர்சனம்.
பொதுவாக மணமகனும், மணமகளும் திருமணத்தை அனுபவிக்கும் வீடியோ அல்லது மணப்பெண்ணுக்கும் அவளது தாய் அல்லது தந்தைக்கு இடையிலான பாச வீடியோ அல்லது கலாட்டா வீடியோக்கள் தான் வைரலாகும். ஆனால், பொது இடம் ஒன்றில் மருமகளின் புடவையை மாமியார் கீழே அமர்ந்து சரி செய்துவிடுவது என்பது இதுவரை யாரும் பார்க்காத காட்சியாக இருக்கலாம்.
இந்த செயலை செய்வது மாமியாராக இல்லாமல் தாயாக இருந்தால் இந்த வீடியோவுக்கு இவ்வளவு பிரபலம் கிடைத்திருக்காது. ஒரு செயலை செய்வது யார் என்பது விஷயத்தின் முக்கியத்துவத்தை முடிவு செய்கிறது என்பதை உறுதி செய்யும் வீடியோ இது.
சமீபத்தில், ஒரு சமூக ஊடக செல்வாக்குடையவர் தனது ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஒரு விருந்து நிகழ்ச்சியில் பலர் இருக்கின்றனர். அப்போது, மருமகளின் புடவையை சரி செய்துக் கொண்டிருக்கிறார் மாமியார். புடவையை சரி செய்த பிறகு, இப்போது சரியாக இருக்கிறதா என்று கேட்கும் வீடியோ இது.
Also Read | தினமும் குளிக்காத மனைவியை விவகாரத்து செய்யத் துடிக்கும் கணவன்
இந்த வீடியோவை பார்க்கும்போது, இந்த மருமகள் புதிதாக திருமணமான மணமகள் என்பது தெரிகிறது. ஏனெனில் அந்தப் பெண், திருமணத்தில் மணப்பெண்கள் அணியும் சிவப்பு நிற வளையல்களை அணிந்திருக்கிறார். மாமியாரும் மருமகளும் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார்கள் என்பதையும் ஊகிக்க முடிகிறது.
இந்த வீடியோ நெட்டிசன்களின் இதயங்களை கொள்ளைக் கொண்டது. இந்த வீடியோவை ஆஷ் என்ற இன்ஸ்டாகிராம் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
சமூக ஊடகப் பயனர்கள் இந்த வீடியோவை நேசிக்கின்றனர், ஏனெனில் மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையிலான பிணைப்பு அரிதாகவே காணப்படுகிறது. இந்த வீடியோவிற்கு பலரும் பதிவிட்டுள்ள கருத்துக்கள் இந்த உண்மையை தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.
Read Also | பிரபல மகாபாரத பாடல், சுலோகங்களை பிசிறில்லாமல் பாடும் இஸ்லாமியர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR