மூச்சுவிடும் பூமி... இணையத்தில் வைரலாகும் அதிசய வீடியோ: மிஸ் பண்ணாம பாருங்க
Viral Video of Earth Breathing: பூமியும் மூச்சுவிடும்!! ஆம் அதற்கு சான்றாக ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
Viral Video of Earth Breathing: சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படும் வீடியோக்கள் நம் சிந்தனைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அமைகின்றன. சில வீடியோக்கள் பல நாட்களுக்கு முன்னரோ, பல ஆண்டுகளுக்கு முன்னரோ கூட முதன் முதலில் பதிவாகியிருக்கும். ஆனால், அவையும் அவ்வப்போது டிரெண்ட் ஆகி நம்மை மகிழ்விக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோவைதான் இன்றைய பதிவில் காணவுள்ளோம்.
இயற்கை என்றாலே அதிசயம் தான். இதை பற்றி நாம் புரிந்துகொள்ள ஆசைப்பட்டால், நாம் பல ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் எதிர்கொள்வோம். மனிதர்கள், விலங்குகள், மரங்கள், செடி, கொடிகள், பூச்சிகள், புழுக்கள் என நாம் அனைவரும் இயற்கை அன்னையின் பிள்ளைகளே. நாம் உயிர் வாழ்வதன் சான்றாக மூச்சு விடுகிறோம், பல வித செயல்களில் ஈடுபடுகிறோம். மரங்களும், செடி கொடுகளும், வளர்வதன் மூலம் தங்களது உயிரோட்டத்தை காண்பிக்கின்றன. ஆனால், இயற்கைக்கு உயிர் இருப்பதை அப்படி தெரிந்துகொள்வது. இந்த பூமிக்கு உயிர் உள்ளதா? பூமியும் சுவாசிக்குமா?
பூமியும் மூச்சுவிடும்!! ஆம் அதற்கு சான்றாக ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அதிசயங்களின் இருப்பிடமாக இருக்கும் பூமி நமக்கு அளிக்கும் ஆச்சரியங்களில் இதுவும் ஒரு ஆச்சரியமாக உள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் நம்மால் நம் கண்களையே நம்ப முடியவில்லை. இயற்கை தன்னகத்தே கொண்டுள்ள பல வித வினோதங்களில் இது மிகப்பெரிய வினோதமாக உள்ளது.
மேலும் படிக்க | மூன்று பாம்புகளை விழுங்கி கக்கும் ராஜநாகம் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ
பூமி மூச்சுவிடும் அதிசய வீடியோவை இங்கே காணலாம்: