சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தல் (US Elections) முடிவுகளுக்காக அமெரிக்கர்களும் உலக நாடுகளும் ஆவலுடன் காத்திருக்கையில், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கமலா ஹாரிஸின் (Kamala Harris) மூதாதையர் கிராமமான துலசேந்திரபுரம் என்ற கிராமத்தில் வசிப்பவர்கள், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்கள் ஆதரவைக் காண்பிப்பதற்காக, பல கிராமவாசிகள் ஒன்று கூடி வியாழக்கிழமை கமலாவை வாழ்த்தி பெரிய கோலங்களைப் போட்டனர். கிராமத்தில் ஒரு சில பெண்கள் வரைந்த கோலங்களில் ‘நாங்கள் கமலா ஹாரிஸை வாழ்த்துகிறோம்’ என்ற செய்தியையும் தம்ப்ஸ் அப் குறியும் இருந்தது.



அது மட்டுமல்லாமல், ஹாரிஸின் புகைப்படங்கள் கிராமம் முழுவதும் ஒட்டப்பட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


"2020 அமெரிக்கத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, அவர் வந்து எங்களைச் சந்திப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று ஒரு உள்ளூர்வாசி கூறினார்.


ALSO READ: US Elections: வெற்றியை நோக்கி Biden, ஒப்புக்கொள்ள மறுக்கும் Trump, காத்திருக்கும் US!!


 இதற்கு முன்னர், கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் அவருக்காக சிறப்பு வெற்றி பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. அனைவருக்கும் இலவச இட்லி மற்றும் சாம்பார் விநியோகிக்கப்பட்டது. தேர்தல்களுக்கு முன்னதாக அவருக்கு வாழ்த்து கூறும் வகையில் சுவரொட்டிகள் சாலைகளை அலங்கரித்தன.


ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கமலா ஹாரிஸை தனது துணை அதிபர் வேட்பாளராகவும் தேர்ந்தெடுத்ததிலிருந்தே இந்த கிராமம் அனைவரது பார்வையிலும் உள்ளது.


ஹாரிஸ் ஜமைக்கா தந்தை மற்றும் இந்திய தாய் ஷியாமலா கோபாலனுக்கு பிறந்தார். கமலாவின் தாய் சென்னையில் பிறந்தார். மேலதிக படிப்புக்காக அமெரிக்காவிற்குச் செந்றார். ஹாரிஸின் தாய்வழி தாத்தா சென்னை நகருக்கு தெற்கே 320 கி.மீ தொலைவில் அமைந்துள்ள துலசெந்திரபுரத்தில் பிறந்தார்.


கலிபோர்னியா (California) செனட்டர் ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவிற்கு முதல் பெண் துணை அதிபராகும் பெருமையைப் பெறுவார். அமெரிக்க செனட்டராக பதவியேற்ற முதல் தெற்காசிய அமெரிக்கர் அவர். சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்கர் என்ற பெருமையும் ஹாரிசுக்கு உள்ளது.


இப்போது அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவில் ஒரு பெரிய அரசியல் பதவியை வகிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் ஆவார்.


ALSO READ: US Election 2020: ஒபாமா சாதனையையும் வீழ்த்தி அதிபர் பதவியை நோக்கி முன்னேறும் ஜோ பிடன்...!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR