நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இரண்டாம் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மேனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், சாந்தனு என நடிகர் பட்டாளனே நடித்துள்ளது.


இதுவரை இத்திரைப்படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் நாடிதுடிப்பை அதிகரித்துள்ள நிலையில், சமீபத்தில் காதலர் தினம் அன்று இத்திரைப்படத்தின் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த பாடல் விஜய் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் அனிரூத் இந்த பாடலை தற்போது பகிர்ந்துள்ளார்.


இதற்கிடையில் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் மார்ச் 15-ஆம் தேதி சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகளவி மக்கள் கூட்டம் கூடும் நிகழ்வுகளை தவிர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி தவிர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


எனினும் படத்தின் இசை வெளியீட்டு விழா, படத்தை சார்ந்த படக்குழுவினர் மட்டும் கொண்டு எளிமையாக நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.