எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் முதல் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.


ALSO READ | Valimai: வலுவாய் தடம் பதித்தது தல அஜித்தின் வலிமை பர்ஸ்ட் லுக்


இந்த நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நேற்று மாலை அதிரடியாக ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு மாஸ் காட்டியது. போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே லைக்குகளை அள்ளிய ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. இப்பொழுது வலிமை ஓடிடி உரிமை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.


அதன்படி வலிமை படத்தின் ஓடிடி உரிமையை ஜி5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் மற்றும் ஜீ திரை வாங்கியுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. படம் இந்த ஆண்டு திரையில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.


ALSO READ | Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR