Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது

தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று தொடங்கியது.

Written by - ZEE Bureau | Last Updated : Jul 11, 2021, 02:28 PM IST
Valimai Update: ஐதராபாத்தில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கிய நிலையில் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜூலை 15 ஆம் தேதி வலிமை பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது.

ALSO READ | விரைவில் தல அஜித்தின் வலிமை திரைப்படம் ரிலீஸ்; வெளியானது முக்கிய தகவல்

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு விதிமுறைகளில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ள நிலையில் வலிமை படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகளும் இணைப்புக் காட்சிகளும் எடுக்கப்படவுள்ளன. சண்டைக் காட்சிகளை வெளிநாட்டில்தான் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குனர் வினோத்.

அதன்படி சண்டைக் காட்சிகளுக்கு முன்பாக இணைப்புக் காட்சிகளை மூன்று நாட்கள் படமாக்க திட்டமிட்டது படக்குழு. ஐதராபாத்தில இன்று முதல் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

ALSO READ | Watch: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நடிகர் அஜித்தின் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News