நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் மூன்றாம் சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது., இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர்.


100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களை கொண்டு துவங்கியது. இவர்களில் பாத்திமா பாபு, நடிகை வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா ஆகிய 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த வார தொடக்கத்தில் நடிகர் சரவணன் சில காரணங்களால் அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கும் நபர் இவர்களுடன் இணைந்து பயணிக்கலாம் என கூறப்பட்டது. அந்த வகையில் சமீபத்தில் நடிகை கஸ்தூரி புதிய போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார்.


தற்போது 11 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பிக் பாஸின் 50-வது நாளை முன்னிட்டு, வீடு ஸ்டார் ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. ஹோட்டல் மேலாளராக சேரன், தலைமை சமையல்காரராக மதுமிதா, உதவியாளர்களாக கஸ்தூரி, தர்ஷன், அபிராமி, லாஸ்லியா, உணவு பரிமாறுபவர்களாக கவின், சாண்டி, முகின், செரின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளது போன்ற காட்சிகளை இன்றைய பிக் பாஸின் முதல் ப்ரோமோ காட்டுகிறது.



விருந்தாளியாக புதிய நபர் ஒருவார் வீட்டினுள் நுழைவார் என பிக்பாஸ் கூற, பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவதாக வெளியேற்றப்பட்ட வனிதா இன்றைய பிக் பாஸில் விருந்தாளியாக உள்ளே நுழைந்திருக்கிறார்.


எனினும் இவர் தற்காலிக விருந்தாளியா?, இல்லை நிரந்திர விருந்தாளியா என்பது இன்றைய நிகழ்ச்சிக்கு பின்னரே தெரியவரும்.