நியா-2 வரலட்சுமியின் புதிய அவதாரம் -SeePic..!
ரொமாண்டிக், திரில்லர் கலந்த ஃபேன்டஸி படமான நியா-2 படத்திற்கான ‘ஃபர்ஸ்ட் லுக்’ வெளியீடு...!
ரொமாண்டிக், திரில்லர் கலந்த ஃபேன்டஸி படமான நியா-2 படத்திற்கான ‘ஃபர்ஸ்ட் லுக்’ வெளியீடு...!
கடந்த 1979-ம் இயக்குநர் துரை இயக்கத்தில் கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான படம் நீயா. நீயா-வில் ஸ்ரீபிரியா பாம்பாக நடித்துள்ளார். நீயா படத்திற்கு சங்கர் கணேஷ் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியான காலத்தில் சூப்பர் ஹிட்டானது. நீயா படமும் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு பிறகுதான் பாம்பு நடனங்கள் பிரபலமானது.
தற்போது பாம்பை வைத்து உருவாகும் சின்னத்திரை தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பாம்பை அடிப்படையாக கொண்டு நீயா-வின் இரண்டாம் பாகம் எடுக்கின்றனர். நியா-2 படத்திற்கான ‘ஃபர்ஸ்ட் லுக்’ தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நாகினியாக வரலட்சுமி நடிக்கவுள்ளார். ஜெய் ஹீரோவாகவும் உடன் காத்ரீன் தெரஸா மற்றும் ராய் லஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர்.
நீயா படம் குறித்து ராய் லஷ்மி, இந்தப்படம் முதல் படமான நீயாவை விட முற்றிலும் வேறுபட்டது என்று கூறியுள்ளார். ரொமாண்டிக், திரில்லர் கலந்த ஃபேன்டஸி படமாக இது உருவாகும் எனக் கூறியுள்ளார். இந்தப் படத்தில் 3 கதாபாத்திரத்தில் ராய் லஷ்மி நடிக்கிறார். தற்போது 2 ஆம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.