சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படத்தில் அமைக்கப்பட்ட செட் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம், 'வேலைக்காரன்'. 


ரெமோ படத்தைத் தயாரித்த '24 AM STUDIOS' இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து, வரும் டிசம்பர் 22-ம் தேதி படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக கடந்த டிச.,3-ம் நாள் இப்படத்தின் இசை வெளியானது. சமீபத்தில் இப்படத்தின் "எழு வேலைகாரா" பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் படத்தில் அமைக்கப்பட்ட செட் குறித்து இயக்குனர் மோகன் ராஜா தகவல்களை கூறுகிறார்.