Crocodile Attack Video: முதலையைப் பார்த்தாலே பயப்படுபவர்களுக்கு மத்தியில், முதலை கட்டிப் பிடித்தாலும் அதை கட்டிப்பிடி வைத்தியமாக நினைத்து அமைதி காக்க முடியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முடியும் என்பதுபோல உணர்த்தும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. தன்னை காதலனைப் போல தழுவும் முதலையை, தள்ளி விடாமல், அதை அரவணைத்து கட்டிப்புரளும் நபரைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறதா?


அந்த மனிதன் முதலைக்கு சிறிதும் பயப்படவில்லை என்பதை வீடியோவில் (Crocodile Video) பார்க்கலாம். முதலை மிகவும் கொடூரமான விலங்காக கருதப்பட்டாலும், அது பெரும்பாலும் தண்ணீரில் இருப்பதால் முதலைகளுடனான மனிதர்களின் தொடர்பு குறைவுதான். 


தற்செயலாக வெளியே வந்தாலும், சக்திவாய்ந்த முதலையின் கிடுக்கிப்பிடியில் சிக்கினால், சின்னாபின்னமாக வேண்டியது தான். ஆனால் சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் கண்களையே நம்பமுடியவில்லை.   


மயிர் கூச்செறிய வைக்கும் வீடியோவை பார்த்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றும்?


 



 


வீடியோவில், முதலை ஒன்று ஒருவரை ஆலிங்கனம் செய்துக் கொண்டிருக்கும் காட்சி, அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒன்றாக ஏற்படுத்துகிறது.


மிகவும் பெரிய அளவில் இருக்கும் முதலையை பார்த்தால் பிரமாண்டமாக இருக்கிறது.  முதலையின் வடிவத்தைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது.


ஆனால் அந்த முதலையின் நட்பான அரவணைப்பைப் பார்த்து சமூக வலைதளவாசிகள் சிரிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.  


மேலும் படிக்க | முதலையின் செயலால் முடங்கிய சாலை! வைரலாகும் வீடியோ


வைரலாகும் வீடியோவில் ஒரு மனிதன் தரையில் படுத்திருப்பதை காணலாம். ஊர்ந்து வரும் பிரம்மாண்டமான முதலை, அந்த நபரின் மேல் ஏறுகிறது. அந்த நபர் மிகவும் இயல்பாக முதலையைத் தழுவிக்கொண்டிருந்தார். அந்த மனிதன் முதலைக்கு சிறிதும் பயப்படவில்லை என்பதும் வீடியோவில் தெரிகிறது.  


jayprehistoricpets என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோ (Viral Video of Crocodile) பகிரப்பட்டுள்ளது. இதனுடன், பயனர், 'When Darth gator wants to be the BiG BOY and play' என்று எழுதியுள்ளார். வீடியோவை பார்க்கும் பலரும் அந்த நபரை பாராட்டுகின்றனர்.


இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வீடியோவைப் பற்றி ஒரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், 'இந்த ஆக்கிரமிப்பு இன விலங்குகளிடமிருந்து மனிதர்கள் விலகி இருக்க வேண்டும்' என்று எழுதினார்.


மேலும் படிக்க | அட்டாக் செய்ய வந்து அடங்கிப்போன மலைப்பாம்பு: மாஸ் காட்டிய சிறுத்தை


மேலும் படிக்க | ‘என் அம்மா யாரு?’ குறும்புக்கார அம்மாவை தேடும் கியூட் குழந்தையின் வைரல் வீடியோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR