திக்.. திக்..நொடிகள்’ புலியை வேட்டையாடிய ராட்சத முதலை - வைரல் வீடியோ

வனப்பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த புலியை ராட்ச முதலை ஒன்று கணப்பொழுதில் வேட்டையாடி தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 1, 2023, 10:38 PM IST
  • புலியை வேட்டையாடிய முதலை
  • நொடிப்பொழுதில் அரங்கேறிய வேட்டை
  • இணையத்தில் வைரலாகியுள்ள வீடியோ
திக்.. திக்..நொடிகள்’ புலியை வேட்டையாடிய ராட்சத முதலை - வைரல் வீடியோ title=

வேட்டை தான் வாழ்க்கை என்பது விலங்குகளுக்கு எழுப்பட்டிருக்கும் விதி. ஒரு விலங்கை இன்னொரு விலங்கு வேட்டையாடுவது என்பது அங்கு அன்றாடம் நிகழும் சம்பிரதாயம். அந்த வாழ்க்கை முறையை பார்க்கும்போது, சரி, தவறு என எதுவும் கிடையாது என்பதை எளிமையாக புரிந்து கொள்ளலாம். யார் யாரை? எப்போது வேட்டையாடுவார்கள் என்பதே கணிக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | சிங்கத்துடன் மோதும் வரிக்குதிரை; வல்லவன் வாழ்வான் என்பது இது தானோ..!!

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விலங்குகள் ஒவ்வொன்றும் தினமும் போராட வேண்டியிருக்கும். மான்களை வேட்டையாடுவது புலிகள் என்றால்,புலிகளை வேட்டையாட முதலைகள் இருக்கின்றன. வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகில் உண்டு என்பதை வனப்பகுதியில் நிகழும் அசாதாரண நிகழ்வுகளை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். இப்போது, டிவிட்டரில் வைரலாகியிருக்கும் வீடியோ ஒன்றில், தண்ணீர் குடிக்க வரும் புலியை, ராட்ச முதலை ஒன்று லாவகமாக வேட்டையாடி தூக்கிச் செல்கிறது. அந்த வீடியோவில் இருக்கும் ஒவ்வொரு நொடிகளும் திக் திக் நொடிகளாக நகர்கின்றன. 

இரண்டு மூன்று புலிகள் கூட்டமாக தண்ணீர் குடிக்க ஒரு நீரோடை அருகே வருகின்றன. முதலை இருக்கும் என்பது அவைகளுக்கு முன்பே தெரிந்திருக்கும்போல. ஏனென்றால், இரண்டு புலிகள் கரையில் பயத்துடன் நிற்க, ஒரயொரு புலி மட்டும் பயந்தவாறு தண்ணீரைக் குடிக்கிறது. தண்ணீருக்குள் இருக்கும் சலம்பல்களை புலியாலும் உணர முடிகிறது. ஏதோ நடக்கப்போகிறது என்ற அச்சத்துடனேயே தண்ணீர் குடிக்கும் புலியை, கணப்பொழுதில் நீருக்குள் இருந்து எழுந்த ராட்சத முதலை கவ்விச் செல்கிறது. நொடிப்பொழுதில் அரங்கேறும் அந்த வேட்டை நிகழ்வை, வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவரையும் திகலடையச் செய்யும். இதனையடுத்து, இரண்டு புலிகள் கரையில் நிற்கின்றன. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | ‘என் அம்மா யாரு?’ குறும்புக்கார அம்மாவை தேடும் கியூட் குழந்தையின் வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News