தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘வேட்டிக் கட்டு’ என்னும் பாடல் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா நடிக்க, டி இமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'விஸ்வாசம்' இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘அட்ச்சி தூக்கு’ கடந்த 10-ம் தேதி வெளியானது. இமான் பாடிய இப்பாடல் 9 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்பாடலை தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் டிராக்காக ‘வேட்டிக் கட்டு’ எனும் பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர்.


விஸ்வாசம் படத்தின் அடிச்சு தூக்கு, வேட்டி கட்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் எந்த ஆர்பாட்டமும் இன்றி இப்படத்தின் அனைத்து பாடல்களையும் படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 



இசை வெளியீட்டு விழா என எதுவும் இன்றி வழக்கம்போல் இணையதளத்தில் பாடல்கள் வெளிவரவுள்ளது. இந்த படத்திற்காக டி.இமான் ஐந்து பாடல்கள் கம்போஸ் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்கள் தவிர மீதியுள்ள மூன்று பாடல்களும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த தகவல் வெளியானது முதல் ட்விட்டரில் விஸ்வாசம் கொண்டாட்டம் என்ற ஹேஷ்டேக் டிரண்டாகி வருகிறது.