மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உணர்ச்சி உண்டு என்பதை நிரூபிக்கும் வகையிலான வீடியோ, இணைய உலகை கலங்க வைத்துள்ளது. அதிலும் தாயுள்ளம் என்பது மனிதர்களாலும் விலங்குகள் ஆனாலும், குழந்தைக்காக துடிக்க கூடியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புத்திசாலித்தனமான பலசாலியான யானைகள், உணர்ச்சிகளை அனுபவிக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவை. தாய் யானை ஒன்று தனது குட்டியின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் மனநிலையை காட்டும் வீடியோ நிச்சயம் உங்கள் கண்களின் கண்ணீரை வரவழைக்கும். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் தாய் யானை ஒன்று, தனது இறந்த தனது குட்டியின் உடலை சுமந்து செல்லும் இதயத்தை உலுக்கும் காட்சி ஒன்று பதிவாகியுள்ளது. 


ஜல்பைகுரியில் உள்ள அம்பாரி டீ எஸ்டேட்டில் தாய் யானை தனது தும்பிக்கையால் தனது இறந்த கன்றுக்குட்டியை மிகவும் சிரமத்துடன் தூக்கிச் செல்ல போராடுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.


வெள்ளிக்கிழமையன்று டோர்ஸ் பிராந்தியத்தின் சுனாபதி தேயிலைத் தோட்டத்தில் யானைக் குட்டி ஒன்று இறந்த நிலையில், தாய் அதை விட்டு பிரிய மனமில்லாமல், அதன் உடலை ஏழு கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்றதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர். துக்கத்தில் இருக்கும் தாயுடன் 30 பிற பெரிய யானைகளும் சேர்ந்து செல்ன்றதாக வன அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். எனினும் யானைக் குட்டி எப்படி இறந்தது என்பது தெரியவில்லை.


மேலும் படிக்க | Viral Video: இரு தலைப்பாம்பிடம் சிக்கிய எலி; மனம் பதறச் செய்யும் கொடூர வீடியோ


வீடியோவை இங்கே காணலாம்:




வனவிலங்குகளின் குழு சடலத்தை மீட்க பினகுரி பகுதிக்கும்சென்றது, ஆனால் யானை ரெட்பேங்க் தேயிலை தோட்டத்திற்கு சென்று விட்டது. இதற்கிடையில், யானை மற்றும் கூட்டத்தின் நடமாட்டத்தை வனத்துறையினர் ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்து வருகின்றனர். ரெட் பேங்க் தேயிலைத் தோட்டத்தின் அதிகாரி சுதிர் குஹா கூறுகையில், தாய் குட்டியின் உடலை சிதேயிலைத் தோட்டத்திற்குள் கொண்டு வந்ததாகவும், யானைக்கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக தோட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.


இந்த வீடியோ வைரலாகி, நெட்டிசன்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இது போன்ற ஒரு காட்சியைக் கண்டு மனம் உடைந்துவிட்டது.


மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR