இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று, தொடங்கி நடைப்பெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களுக்க 4 விக்கெட் இழந்து 371 ரன்கள் எடுத்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்த நிலையில், இந்தியா 536 ரன்கள் எடுத்து தங்களது முதல் இன்னிங்ஸை டிக்லர் செய்து கொண்டது!


அதன் பின்னர் களமிரங்கிய இலங்கை அணி 44.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் குவித்துள்ளது.


டெல்லியில் கடந்த சில நாட்களாக பனிமூட்டத்தில் கலந்து கரும் புகை காணப்படுகிறது.  இதன் காரணமாக மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் வருகின்றன. 


இந்நிலையில், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயன இன்றைய போட்டியில் பீல்டிங் செய்த இலங்கை அணி வீரர்கள் மூக்கை மூடும் விதமாக மாஸ்க் அணிந்து விளையாடினர்.


இதனால் போட்டி சுமார் 16 நிமிடம் சச்சரவு நிலவியது. பின் சிறிது நேரத்தில் இலங்கை வீரர்கள் தொடர்ந்து போட்டியில் விளையாடினர். எனினுன் இந்த நிகழ்வால் ஆத்திரமடைந்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, தங்களது பேட்டிங்கை டிக்லர் செய்வதாக செய்கை மூலம் தெரிவித்தார்.



இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.