நீலகிரி மாவட்டம், கூடலூர்  முதுமலை வன பகுதியானது 325 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்தப் பகுதியில் சில வாரங்களாக மழை பெய்து வந்ததால், காடுகள் அனைத்தும் பச்சை பசேலென காணப்படுகிறது. புற்களும் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காட்டு யானை உள்ளிட்ட விலங்குகள் அப்பகுதியில் உணவுக்காக முகாமிட்டுள்ளன. கூட்டமாக சுற்றித்திரியும் காட்டு யானைகள், இலை, கொடி தலைகளை தேடித் தேடி உண்ணுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆற்று நீரில் சிக்கிய நாயை மீட்ட இளைஞர்...வைரல் வீடியோ!


வனவிலங்குகள் வருகையையொட்டி, அங்கு சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் வாகனங்கள் மூலம் அழைத்துச் சென்று காண்பித்து வருகின்றனர். வழக்கமாக இது நடைபெறக்கூடிய ஒன்று என்றாலும், இந்த முறை வனத்துறை வாகனத்தை யானை ஒன்று துரத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று யானைகள் இருக்கும் பகுதிக்கு வனத்துறையினர் சென்றுள்ளனர். அப்போது யானைகள் கூட்டமாக இருப்பதை பார்த்து அவர்கள் வியப்படைந்தனர்.