கராச்சி: PSL 2022 தொடக்க ஆட்டத்திற்கு முன்பு கராச்சியின் நேஷனல் ஸ்டேடியத்தில் தீ விபத்து ஏற்பட்டது 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானில் எதிர் வரவிருக்கும் பிஎஸ்எல் 2022 போட்டித்தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் பிரியர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், கராச்சி நேஷனல் ஸ்டேடியத்தில் தீ விபத்து ஏற்பட்டு, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


கராச்சி நேஷனல் ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ச்சிகரமான சம்பவமாக,ஸ்டேடியத்தின் மேக்-ஷிப்ட் வர்ணனை பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.



பாகிஸ்தான் லீக் போட்டிகளின் புதிய சீசன் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, நடைபெற்ற இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (Pakistan Cricket Board) டி20 லீக்கை நடத்துவதற்கு தயாராகி வருகிறது, 


முதல் 15 ஆட்டங்கள் கராச்சியில் நடைபெறுகின்றன. இன்று, (ஜனவரி 27) நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதுகின்றன. 


ALSO READ | BBL -ல் விநோதம்..! பிளேயிங் 11-ல் விளையாடும் பயிற்சியாளர்


லீக்கிற்கு முன்னதாக, மிகப்பெரிய பின்னடைவாக இந்த விபத்து ஏற்பட்டது. இருந்தபோதிலும், துரதிர்ஷ்டவசமான இந்த தீ விபத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் தரும் செய்தியாக இருக்கிறது.  


தீ விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தாக்கல் செய்த அறிக்கையின்படி, தீ விபத்துக்கு முக்கிய காரணம் மின் கம்பிகளில் ஏற்பட்ட மின்கசிவுதான் என்று தெரிய வந்துள்ளது.


விபத்தைத் தொடர்ந்து, கராச்சியில் உள்ள மைதானத்தில் தீயணைப்பு வாகனம் மற்றும் பணியாளர்கள் நிறுத்தப்பட்டதை PCB செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.


மேலும், மைதானத்தின் மூன்றாவது மாடியில் இருந்த வர்ணனை பெட்டியும் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்-பாதுகாப்பான குமிழிக்குள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் வர்ணனையாளர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  


இன்று தொடங்கும் பாகிஸ்தான் லீக் போட்டிகளின் கிளைமேக்ஸ் இறுதிப் போட்டி பிப்ரவரி 27 அன்று நடைபெறும்.


ALSO READ | இந்திய அணிக்கு திரும்பும் 3 முக்கிய வீரர்கள்..! டிராவிட் ப்ளான்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR