சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அந்த வகையில் வன விலங்குகள், அதன் வாழ்க்கை தொடர்பான வீடியோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பிஸியான வாழ்க்கையில், உடற்பயிற்சிக்காக நேரத்தை ஒதுக்குவது மிகவும் முக்கியம். நீங்கள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் பல உடல் நல பிரச்சனைகள் உங்களை சூழ்ந்து கொள்ளும். அதனால் தான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும். இதனை மனிதர்களுக்கு அறிவுறுத்துவதை போல உள்ள ஒரு சிறுத்தை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சிறுத்தை இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், இந்த வீடியோவில், சிறுத்தை சிறுத்தையை ஒன்று சூரிய நமஸ்காரம் செய்வதைப் போன்ற வீடியோவைக் காணலாம், அவரைப் பார்த்த மக்கள் இது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். 


IFS அதிகாரி பகிர்ந்துள்ள சிறுத்தை வீடியோ


சிறுத்தையின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, இது ட்விட்டரில் பல பயனர்களால் பகிரப்பட்டு வருகிறது. IFS அதிகாரி சுஷாந்தா நந்தா இந்த வீடியோவை மார்ச் 27, திங்கட்கிழமை வெளியிட்டார் - சிறுத்தை சூரிய நமஸ்காரம் செய்யும் இந்த வீடியோ இதுவரை 3000க்கும் மேற்பட்ட லைக்குகளையும் 300 ரீட்வீட்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோ இரண்ட லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். சிறுத்தை வீடியோவை கீழே காணலாம்


 



 இந்த 27 வினாடி வீடியோவை பார்த்த பொதுமக்கள் சிறுத்தைக்கு ரசிகர்கள் ஆகியுள்ளனர்! இந்த வீடியோவில், சிறுத்தை கால்களை நீட்டி உடல்பயிற்சி செய்வதை நாம் காணலாம். முதலில், அவர் தனது முன் பாதங்களை முன்னோக்கி நகர்த்தும்போது பின்புறத்தை மேலே இழுக்கிறார். இதற்குப் பிறகு, தன்னை முன்னோக்கி இழுக்கும் போது, ​​அவர் பின்புறத்தை கீழே வளைக்கிறார். இந்தக் காட்சியைப் பார்த்ததும் சிலர் சிறுத்தை 'சூரிய நமஸ்காரம்' செய்வதாக உணர்கிறார்கள்! அதே நேரத்தில், சில பயனர்கள் வேட்டையாடுவதற்கு முன் தன்னை உடலை தயார் நிலையில் மாற்றுவதற்காக சிறுத்தை அவ்வாறு செய்வதாக கூறினர். சிறுத்தைக்கு யோகா கற்பித்தவர் யார், யோகா ஆசிரியரோ, யூடியூப் அல்லது எந்த புத்தகமோ இல்லை என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார் ஆனாலும் இவ்வாளவு சிறப்பக செய்கிறதே என வியந்து கருத்து பதிவிட்டுள்ளார். 


மேலும் படிக்க | Viral Video: பேச மட்டும் இல்லை வித்தையும் தெரியும்... பேப்பரில் இறக்கை செய்து அசத்தும் கிளி!


மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!


மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ