சன்னி லியோனின் `It`s Hot` பாடல் இணையத்தில் வெளியானது!
நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள `The Untold Story of Sunny Leone` தமிழ் மொழியில் இணையத் தொடராக Zee5-ல் ஒளிப்பரப்பாகி வருகிறது!
நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள "The Untold Story of Sunny Leone" தமிழ் மொழியில் இணையத் தொடராக Zee5-ல் ஒளிப்பரப்பாகி வருகிறது!
பாலிவுட் திரையுலகின் பிரபலமாணவர்களில் முக்கயமானவர் சன்னிலியோன். அவரது முகத்திற்கு பின்னால் பலதர விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது வாழ்க்கை பயணம் என்பது அவரக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை என்பதை யாரும் உணர தயாராக இல்லை.
பாலிவுட் திரைவுலகில் நுழைந்த பின்னர் விரைவிலே பெரும் புகழை அடைந்துவிட்டார் அவர். இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5 ஒளிப்பரப்ப உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஜூலை 16-ஆம் நாள் முதல் "The Untold Story of Sunny Leone" என்னும் பெயரில் ஒளிப்பரப்பி வருகின்றது.
இணையத்தில் ஒளிப்பரப்பாகும் இத்தொடருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ள நிலையில் தற்போது இந்த தொடரில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்று ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த பாடலினை ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, தமிழ் படங்கள், பாலிவுட், ஹாலிவுட் என எந்த படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ், சன்னி லியோனின் "The Untold Story of Sunny Leone" தெடரையும் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!