பீட்சா கடைக்கு திருடப்போன இடத்தில் மாட்டாம் இருக்க எல்லா வேலையும் பார்த்தேன் ஆனா திருடின பெட்டியில் காசு இருக்கணு பாக்கலையே பாஸ்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பரந்த உலகத்தில் வேடிக்கையான பல விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் அனைவருக்கும் தெரிவதில்லை. சில நிகழ்வுகள் மட்டும் எப்படியாவது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி அனைவரிடமும் சென்றடைகிறது. 


தற்போதைய காலகட்டத்தில் சிசிடிவி கேமிராவில் மூலம் தான் பல கொள்ளையர்களை காவல் துறையினர் பிடிக்கின்றனர். இது போன்ற ஒரு நகைதிருடனின் நகைச்சுவை வீடியோ வைரலாவதை நாங்கள் கண்டோம். அந்த வீடியோவில், ஒரு திருடன் தான் காவல்துறையில் சிக்குவதற்கான எந்த ஆதாரமும் விட்டு விட கூடாது என்று கவனத்துடன் திருடும் காட்சி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. 


அதில், அவர் முகத்தில் முகமூடியுடனும், தன் விரல் தடங்கள் சிக்கிவிடக்கூடாது என்பதால் கை,கால்களில் சாக்ஸ் அணிந்து 8 நிமிடங்கள் மிக கவனமாக நடந்து காசு இருக்கும் பெட்டியை திருடினான் அந்த திருடன். ஆனால், அந்த பெட்டியோ காலி பெட்டி. பணம் ஏதும் இல்லை. இந்த சம்பவம் அமெரிக்கவின் ப்ளோரிடாவில் மாகாணத்தில் நடந்துள்ளது. அங்குள்ள டாமினோஸ் உணவகத்தில் காலை 2 மணி அளவிற்கு திருட நுழைந்த திருடனுக்கு கடைசியில் கிடைத்ததோ காலி பெட்டி தான்.


காலி பெட்டியை திருடிய திருடனை பிடிக்க அந்த மாகாண போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மிக கவனமாக, 8 நிமிடங்கள் போராடி கடைசியில் காலி பெட்டியை திருடிய திருடனின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. 


இந்த வீடியோவை அப்பகுதி காவல்துறையினர் அவர்களின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.