2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தேனீக்களின் திரள் கிரிக்கெட் வீரர்களை தாக்கிய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரிக்கெட் போட்டிகளில் தேனீக்கள் தாக்குவது இதுவொன்றும் முதல் நிகழ்வல்ல, ஆனால் அத்தகைய தருணத்தை எப்படி சமாளிப்பது என்பது வேடிக்கை தான்!


இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் 5 ஆம் நாள் நடந்த போட்டியில் தான் இது நிகழ்ந்துள்ளது. இந்த போட்டியில் இரண்டு முறை வீரர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஆட்டத்தின் 25.4 ஓவரில் முதல் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. பின்னர் இரண்டாவது முறை 26.3 வது ஓவரில் நிகழ்ந்தது! 


இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் நிகழ்வாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது. அந்த நிகழ்வை நீங்கள் பார்க்க வேண்டாமா?



Courtesy: ProteasCricket