வித்யா பாலனின் `நாட்காட்`, WeAreOne திரைப்படவிழாவில் திரையிடப்படவுள்ளது!
பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனின் வரவிருக்கும் குறும்படமான `நாட்காட்`, We Are One ஆன்லைன் திரைப்பட விழாவில் உலக அரங்கேற்றத்தை சந்திக்கவுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனின் வரவிருக்கும் குறும்படமான 'நாட்காட்', We Are One ஆன்லைன் திரைப்பட விழாவில் உலக அரங்கேற்றத்தை சந்திக்கவுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை நாயகி வித்யா பாலன் வெளியிட்டுள்ளார். தனது படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குறும்படம் ஜூன் 2-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் (இந்திய தரநிலை நேரப்படி) திரையிடப்படும் என்று வித்யா பாலன், தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பான பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., "ஒரு கதைக்கு நம்மை மாற்றும் சக்தி இருக்கிறதா? அறிந்துக்கொள்ள நாட்காட் பாருங்கள், 2 ஜூன் 2020 செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணிக்கு IST @tribeca #WeAreOne-ல்," என்று தெரிவித்துள்ளார்.
பாலன் தனது இன்ஸ்டாகிராம் பயோவில் ஸ்கிரீனிங் இணைப்பை பகிர்ந்து கொண்டதோடு, அதை பின்பற்றுமாறு தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார். உலகெங்கிலும் உள்ள சினிமா பிரியர்களுக்கு சிகிச்சையளிக்க யூடியூபில் ஸ்ட்ரீம் செய்ய 10 நாள் நீடிக்கும் டிஜிட்டல் திரைப்பட நிகழ்வான 'We Are One: A Global Film Festival' நிகழ்ச்சியில் கேன்ஸ், டிரிபெகா, மும்பை திரைப்பட விழா மற்றும் உலகின் முதல் 20 திரைப்பட விழாக்கள் கைகோர்த்துள்ளன.
ஆன்லைன் திரைப்பட விழா மே 29 முதல் ஸ்ட்ரீமிங்கைத் தொடங்கி ஜூன் 7 வரை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
மொழியாக்கம் : அரிஹரன்