‘சீதக்காதி’ படத்தின் 2வது லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டது படக்குழு. இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி, இதிகாச தொடரில் வரும் ராஜா கெட்டப் போல காட்சியளிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்ற விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தின் 2வது லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ்!


 



 


விஜய் சேதுபதி, தனது 25 வது படமான `சீதக்காதி’ யில் மூத்த நாடகக் கலைஞராக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், முதியவர் வேடத்தில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் விஜய் சேதுபதி.


இந்தப் படத்தில் அர்ச்சனா, ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோவிந்த் வஸந்தா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 


கடந்த 15ம் தேதி இப்படத்தின் `அய்யா' என்ற சிங்கிள் டிராக்கை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டார். இந்தப் பாடலின் வரிகளை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா எழுதியுள்ளார். இப்படம் நவம்பரில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்நிலையில் தற்போது சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்ற சீதக்காதி’ படத்தின் 2வது லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.