பேரளிவாளன் உள்பட 7 தமிழர் விடுதலை குறித்து நடிகர் விஜய் சேதுபதி ஆளுநர் பன்வாரிலாலுக்கு கோரிக்கை! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவுசெய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூட்டப்பட்டது. 


அதில் ராஜீவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிக்க முடிவெடுத்து அதை தீர்மானமாக ஆளுநருக்குப் பரிந்துரை செய்து தமிழக அரசு அனுப்பியது. இதையடுத்து, தமிழக அரசு பரிந்துரை வழங்கியும் ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆளுநருக்கு கோரிகைகள் வந்து கொண்டே இருக்கிறன்றது.


இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி எழுவர் விடுதலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் "எழுவர் விடுதலை என்பது தமிழர்களின் பிரச்சனை மட்டுமல்ல. இது ஒரு மனித உரிமை பிரச்னை. இத்தனை வருடங்கள் அவர்களை சிறையில் அடைத்து வைத்திருந்ததே போதும். அவர்களின் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும்" என்று நடிகர் விஜய் சேதுபதி ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.