மத நல்லிணக்க விநாயகர் சதுர்த்தி: கணபதிக்கு சாம்பிராணி புகை போட்டு பூஜித்த இஸ்லாமியர்
Vinayaka Chaturthi 2022: ராமநாதபுரத்தில் நடந்த மத நல்லிணக்க விநாயகர் சதுர்த்தி: கணபதிக்கு சாம்பிராணி புகை போட்டு பூஜித்த இஸ்லாமியர்
மதம் தாண்டிய விநாயகர் சதுர்த்தி: ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பிரம்மாண்டமான முறையில் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபடுகிறார்கள். அதேபோல் ராமநாதபுரம் நகர் பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகிற இரண்டாம் தேதி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அரசு விதிகளுக்குட்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்கள் பொது இடங்களிலும், தங்களது வீடுகளிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகின்றனர். இராமநாதபுரம் நகர் வண்டிக்கார தெருவில் அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட விநாயகர் சிலை இன்று தெருவுக்கு எடுத்துவரப்பட்டது.
விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அதனை பூஜை செய்து வழிபட்டனர்.
மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்தி 2022: விக்னங்களை போக்கும் விநாயகர், கேட்ட வரம் தரும் கணபதி!!
அப்போது அங்கு வந்த இஸ்லாமியர் ஒருவர் அந்த சிலைக்கு சாம்பிராணி புகை போட்டு வழிபட்டு அனைவருக்கும ஆசீர்வாதத்தையும் கொடுத்து கல்வியும் கொடுத்து நல்ல முறையில் வைக்க வேண்டும் இறைவா என வழிபட்டு 'பாரத் மாதா கி ஜே' என உரக்க கூறினார்.
இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
மத மாச்சரியம் இல்லாத இந்த செயல், அந்த பகுதி பொதுமக்களிடையே நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது. இப்படியும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்றும், இதுபோல மத மாச்சரியங்களை கடந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்தி 2022: விக்னங்களை போக்கும் விநாயகர், கேட்ட வரம் தரும் கணபதி!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ