கேரள காவல்துறையின் வெட்கக்கேடான செயல் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த ஒருவரை காவல்துறை அதிகாரி ஒருவர் பலமுறை உதைத்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் (Social Media) வைரலாக பரவி, அனைத்து மட்டங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்து மாநில போலீசார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

20 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை அதே ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது மொபைல் கேமராவில் (Mobile Camera) பதிவு செய்துள்ளார். ரயில் பெட்டி கதவின் அருகில் அமர்ந்து பயணம் செய்த ஒரு நபரை காவல்துறை அதிகாரி பலமுறை எட்டி உதைத்துள்ளார். அந்த காவல் அதிகாரியின் முன் அவர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டும் அவரை அதிகாரிகள் தாக்கி உள்ளனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாவேலி எக்ஸ்பிரஸ் (Maveli Express) ரயிலில் நடந்தது.


 



ALSO READ | அரசுப் பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர் - கோபத்தில் குதித்த மாணவி உயிரிழப்பு


இந்த வீடியோவில் காணப்படும் போலீஸ் அதிகாரி ஏ.எஸ்.ஐ (ASI). அவரும் மற்றொரு போலீஸ்காரரும் கண்ணூரில் இருந்து ரயிலில் ஏறி பயணிகளின் டிக்கெட்டுகளை சரிபார்க்க ஆரம்பித்தனர். அப்பொழுது டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த அந்த நபரை போலீசார் தாக்கினர். மேலும் அவர் போதையில் இருந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். அதன் பிறகு அந்த நபர் வட்கராவில் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டார். 


இந்த சம்பவம் குறித்து கண்ணூர் காவல் கண்காணிப்பாளர் பி. இளங்கோவன் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை அளிக்கும்படி சிறப்புப் பிரிவு ஏஎஸ்பியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.


அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி (Viral Video) வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் அந்த வீடியோவில் உள்ள ரயில்வே ஊழியர்கள் மீதும், அங்கு நின்றிருந்த மற்ற போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 


ALSO READ | வேகமாக வந்த ரயில்.. தண்டவாளத்தில் மீது தலையை வைத்து படுத்த நபர் -Viral Video


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR