Be Cool: காகத்திற்கே சால்வை போர்த்திய மனிதாபிமான மனிதன்! வீடியோ வைரல்

குளிரால் நடுங்கும் காகத்திற்கு உதவும் மனிதநேயம் மிக்க வீடியோ வைரலாகிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2022, 08:03 AM IST
  • காகத்திற்கே உதவிய மனிதர்
  • உதவியை ஏற்றுக்கொண்ட காக்கை
  • வைரலாகும் மனிதாபிமானம்
Be Cool: காகத்திற்கே சால்வை போர்த்திய மனிதாபிமான மனிதன்! வீடியோ வைரல் title=

தட்பவெட்பம், மனிதர்களை மட்டுமல்ல, விலங்குகளையும் பறவைகளையும் பாதிக்கிறது. குளிர் காலத்தில் ஒருவிதமான பிரச்சனை என்றால், வெயில்காலத்தில் வேறுவிதமான பிரச்சனைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக மலைப்பகுதிகளில் வாழும் உயிரினங்களுக்கு குளிர் உச்சத்தில் செல்லும்போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.

குறிப்பாக விலங்குகளும் பறவைகளும் குளிர்காலத்தில் ஏற்படும் பனிப்பொழிவால் பாதிக்கப்படுகின்றன. குளிர் காலத்தில், மனிதர்கள் தீமூட்டி நெருப்பை உருவாக்கி சமாளிக்கலாம். ஆனால் விலங்குகள் மற்றும் பறவைகள் பாவம் என்ன செய்யும்?

குளிரால் நடுங்கும் காகத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் (Viral Video) வைரலாகிறது. வாட்டி வதைக்கும் குளிர் என்பது காகம் நடுங்குவதிலிருந்தே தெரிகிறது. அதோடு, அந்த பகுதி முழுவதும் பனியால் மூடியிருப்பதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. 

நெருப்பு மூட்டி சூடேற்றிக் கொண்டிருக்கும் மனிதர் இருக்கும் இடத்திற்கு வந்த காகம் நடுங்குவது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. 
நெருப்பின் அருகே அமர்ந்து காகம் சூடு ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது, இருப்பினும் குளிரை தாங்க முடியாமல் மிகவும் நடுங்குவது தெரிகிறது. அதைப் பார்த்த அந்த நபர் வேலை சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  

காகம் நடுங்குவதை காணொளியில் காணலாம். இதைப் பார்த்த அங்கிருந்த இளைஞன், உடனடியாக ஒரு சிறிய கம்பளியைக் கொண்டு வந்து உடம்பில் காகத்தின் உடலை போர்த்துகிறார். 

இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த காகம் அமைதியாக இருக்கிறது, பொதுவாக மனிதர்கள் அருகில் வந்தால் காகங்கள் பறந்துவிடும். குளிரால் உறைந்து போனது காகம் மட்டுமா? அதன் பறக்கும் உணர்வும் என்று பலர் இந்த வீடியோவுக்கு பின்னூட்டம் இட்டுள்ளனர்.

இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும், மனிதாபிமானம் மிக்க மனிதரை பாராட்டுகின்றனர்.  இந்த சிறந்த வீடியோ ட்விட்டரில் @buitengebieden_ என்ற கணக்கில் இருந்து பகிரப்பட்டுள்ளது. 

'போர்வையால் போர்த்தப்பட்ட காகம்' என்ற தலைப்பில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. வெறும் 14 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். 

ALSO READ | கல்யாண பொண்ணா இருந்தா என்ன? நமக்கு சாப்பாடுதான் முக்கியம்!! வைரல் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News