பாலிவுட்டில் கிட்டத்தட்ட 50 வருடங்களாக ரசிகர்களை தன் நடிப்பால் கவர்ந்து வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இந்த வயதிலும் அவர் தன் கதாபாத்திரத்திற்காக எடுக்கும் அக்கறையை பார்த்து ரசிகர்கள் மட்டும் இல்லை இளைய தலைமுறை நடிகர்களும் வியக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது 102 ஆல் அவுட் என்ற படத்தில் அவர் நடித்துவருகிறார் நடிகர் அமிதாப் பச்சன். அதில் 102 வயதான முதியவராக நடிக்கும் அவருக்கும் 75 வயதாகும் அவரது மகனுக்கும் இடையே நடக்கும் பாசபோராட்டம் தான் படத்தின் கதையாம்.


இந்த படத்திற்காக அமிதாப் முழுதும் வெள்ளையான முடி மற்றும் தாடியோடு இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.