சுவாரஸ்யமான ஒரு காதல் கதை: காதலுக்காக நீங்கள் எந்த எல்லை வரை செல்வீர்கள்? வங்கதேசத்தை சேர்ந்த பெண் நான் எந்த எல்லைக்கும் செல்வேன் என்பதை நிரூபித்து சாதனையை செய்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தன் காதலனை திருமணம் செய்வதற்காக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு எல்லையை கடந்து வந்துள்ளார், அதுவும் நீச்சல் மூலம். 22 வயது இளம்பெண் தனது 'காதலனுக்காக' இவ்வளவு தூரம் நீந்தி கடந்துள்ளார். அந்த பெண் தன் காதலனை திருமணம் செய்ய இந்திய எல்லையை தாண்டி வந்துள்ளார். அதுவும் கடல் வழியே நீந்தியே எல்லை கடந்துள்ளார். 


காதலனை திருமணம் செய்ய பெண் முதலில் சுந்தரவனக் காடுகளை அடைந்தார். மேலும், உயிரைப் பணயம் வைத்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார். அந்த பெண் கிருஷ்ணா மண்டல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கிருஷ்ணா மண்டல் என்ற அந்த பெண், அபிக் மண்டலை பேஸ்புக்கில் சந்தித்தார். 


மேலும் படிக்க | வாழைப்பழத்தை வெறுக்கும் ஆண் எலிகள்; ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்


அவர்கள் பேஸ்புக் நட்பு காதலாக மாறியது. பரஸ்பரம் தீவிரமாக காதலிக்க தொடங்கினர். அபிக்கைச் சந்திக்க ஆசைப்பட்டார் கிருஷ்ணா. ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் எதுவும் இல்லாததால்,  கடல் வழியாக நீந்திச் செல்லாலாம் என முடிவு செய்தார். ராயல் பெங்கால் புலிகளுக்கு பிரபலமான சுந்தரவனக் காடுகளுக்குள் கிருஷ்ணா முதலில் நுழைந்ததாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.


ஆபத்தான விலங்குகள் வசிக்கும் சுந்தரவனக் காட்டின் வழியாக பயணம்


சுந்தரவனக் காடுகளை அடைந்த பிறகு, அவள் இலக்கை அடைய மேலும் ஒரு மணி நேரம் நீந்தினாள். அவர் தனது காதலர் அபிக் என்பவரை சந்தித்து, பின்னர் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்ததாக கிருஷ்ணா என்ற அந்த பெண் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். கிருஷ்ணா தற்போது பங்களாதேஷ் தூதரக அதிகாரிகளிடன் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க |  மர்மமான பெர்முடா பயணம் மேற்கொள்ள தயாரா; கப்பம் நிறுவனத்தின் பகீர் ஆஃபர்


இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஒருவர் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வருவது இது முதல் முறையல்ல. சில மாதங்களுக்கு முன்பு வங்கதேச வாலிபர் ஒருவர் தனக்குப் பிடித்த சாக்லேட்டை வாங்குவதற்காக எல்லையைத் தாண்டிச் இந்தியா வந்தார். இந்தியாவில் தனக்குப் பிடித்த சாக்லேட் பார் வாங்குவதற்காக இமான் ஹுசைன் எல்லையைத் தாண்டி நீந்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Strychnine: துடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷம்; எதிரிகளிடம் ரஷ்யா பயன்படுத்தியதா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR