Strychnine: துடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷம்; எதிரிகளிடம் ரஷ்யா பயன்படுத்தியதா

துடிதுடிக்க உயிரைக் கொல்லும் உலகின் மிக கொடூரமான விஷம் குறித்து  இரசாயன நிபுணர் டாக்டர் நீல் பிராட்பரி  திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 30, 2022, 04:47 PM IST
  • கொடிய விஷமான இது உடலில் புகுந்தால், எலும்பிலிருந்து சதையை பிய்த்து எடுக்கும்.
  • துடிதுடிக்க உயிரைக் கொல்லும் விஷங்களில் ஒன்று 'ஸ்டிரைக்கின்'.
  • இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட விஷம்.
Strychnine: துடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷம்; எதிரிகளிடம் ரஷ்யா பயன்படுத்தியதா title=

துடிதுடிக்க உயிரைக் கொல்லும் உலகின் மிக கொடூரமான விஷம் குறித்து  இரசாயன நிபுணர் டாக்டர் நீல் பிராட்பரி  திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது வாழ்க்கையில் தான் ஆராய்ச்சி செய்ததில், மிகவும் பயங்கரமான துடிதுடிக்க உயிரைக் கொல்லும் விஷங்களில் ஒன்று 'ஸ்டிரைக்கின்' (Strychnine) என்று  அவர் விவரித்தார்.  இப்படிப்பட்ட கொடூரமான் விஷத்தை ரஷ்யா  பயன்படுத்த்தியதாகக் கூறப்படுகிறது.

உலகின் மிக ஆபத்தான கொடிய விஷமான இது உடலில் புகுந்தால்,  லும்பிலிருந்து சதையை பிய்த்து எடுக்கும். அப்போது விஷம்  எடுத்துக் கொண்ட நபர் நீண்ட நெடு நேரம் வலியினால் துடிதுடித்து இறந்து போவார்.  இந்த விஷத்திற்கு ஸ்ட்ரைக்னைன் என்று பெயரிடப்பட்டுள்ளது. தூள் வடிவில் காணப்படும் இந்த விஷத்தை ரஷ்யா தனது எதிரிகளுக்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது

இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட விஷம்

ரஷ்யா குறித்த தகவல்களை அம்பலப்படுத்திய அலெக்சாண்டர் பெரெபிலிச்னி, லண்டனில் ஸ்டிரைக்னைன் போன்ற இரசாயனப் பொருளால் இறந்து கிடந்தார் என்று 'டெய்லி ஸ்டார்' செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், இதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஸ்டிரைக்னைன் உட்கொண்டதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மனித உடலில் அதன் பயங்கரமான விளைவு காரணமாக, இந்த தீவிர இரசாயனம் இங்கிலாந்தில் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Aliens: வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா..!!

மெதுவாக வேலை செய்யும் விஷம்

விஷம் நிபுணர் டாக்டர் நீல் பிராட்பரி இது குறித்து கூறுகையில், ஒரு மோசமான விஷயம் என்னவென்றால், இது மிகவும் மெதுவாக செயல்படும் விஷம்  இறக்க பல மணிநேரம் ஆகும். இது மிகவும் கொடுமையானது. 

எலும்பிலிருந்து சதையை பிரிக்கும் கொடிய விஷம்

உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு தசையும் ஒரே நேரத்தில் சுருங் கினால் எப்படி இருக்கும் . நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது இல்லையா... உண்மையில் எலும்புகளிலிருந்து சதைகளை பிரிந்து செல்லும். உயிர் வேதியியல் மற்றும் மருத்துவ உயிர் வேதியியலில் பட்டம் பெற்ற டாக்டர் பிராட்பரி, இந்த விஷத்தை பற்றி  'A Test for Poison: Eleven Deadly Substance and the Killer Who Used Them' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

மனித உடலில் ஸ்ட்ரைக்னைனின் பயங்கரமான விளைவுகள் இருந்தபோதிலும், இது கடந்த காலத்தில் செயல்திறனை மேம்படுத்தும் மருந்தாகப் இது பயன்படுத்தப்பட்டது  என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Zero Gravity உள்ள விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News