புதுடெல்லி: ஆண்டாண்டு காலங்களாக, நாய்கள் மிகவும் நன்றியுள்ள பிராணி என்றும் 'நாய்கள் மனிதனின் சிறந்த நண்பர்'  என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்ல, செல்ல நாய் எனது உயிருக்கு உயிரானது என்று எடுத்துரைக்கும் வகையில் ஒரு வினோதமான சமபவம் நிகழ்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 தனது நாயை விட்டு பிரிய விரும்பாத ஒருவர், தனது செல்ல நாய்க்காக, விமானத்தின், அதிக கட்டணம் உள்ள சொகுசு வகுப்பான பிஸினஸ் கிளாஸ் டிக்கெட் முழுவதையும் வாங்கி விட்டார். ஆம், இந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவத்தில், மும்பையில் இருந்து சென்னைக்கு பயணித்த ஒருவர், 2.5 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து தனது செல்லமான வளர்ப்பு நாயுடன் பயணிக்க ஏர் இந்தியா விமானத்தின் பிஸினஸ் கிளாஸ் டிக்கெட் முழுவதையும் வாங்கி விட்டார்.


ALSO READ | அந்தரங்க உறுப்பை அளக்கும் விபரீத ஆசையில், ‘உள்ளே’ சிக்கிக் கொண்ட USB கேபிள்; நடந்தது என்ன..!!


விமானத்தின் பிஸினஸ் கிளாஸில் சுகமாக பயணிக்கும் வாய்ப்பைப் பெற்ற அதிர்ஷ்ட வளர்ப்பு நாய், ஒரு மால்டிஸ் பனிப் பர்பால் (Maltese snowy furball) வ்கை நாய் ஆகும். நாயும் அதன் எஜமானரும் புதன்கிழமை காலை 9 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானமான AI-671 விமானத்தில் ஏறினர்.


மும்பையில் இருந்து சென்னைக்கு புதன்கிழமை ஏர் இந்தியா விமானத்தின் ‘J’ அல்லது பிஸினஸ் கிளாஸ் என்னும் வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது, இதனால் தனது எஜனமானருடன்  ‘ஆடம்பரமாக மற்றும் சொகுசாக’  அந்த செல்ல நாய் பயணம் செய்தது. Airbus A320 என்ற இந்த விமானத்தில் 12 பிஸினஸ் கிளாஸ் வகுப்பு இருக்கைகள் இருந்தன.


மும்பையிலிருந்து சென்னைக்கு இரண்டு மணி நேர விமானத்தில் பயணம் செய்வதற்கான  பிஸினஸ் கிளாஸ் கட்டனம், டிக்கெட்டுக்கு ரூ .18,000 முதல் ரூ .20,000 வரை செலவாகும். தற்போது, ​​ஏர் இந்தியா சில நிபந்தனைகளின் கீழ் செல்லப்பிராணிகளை அதன் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கிறது.


ALSO READ: Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR