பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அய்யோ பாம்பு என்று யாரவது கத்தினால் கூட நடுங்கிப் போவோம். ஆனால் பாம்பாட்டி என்போர் பாம்பை அழகாக கையாளுவார்கள். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர்கள் இவர்களை, பாம்பாட்டிச் சித்தர்கள் என்று கூறுவது வழக்கம். பாம்புகளைப் பறிப்பவர் பிடிப்பவர்கள் கூட பாம்புகளின் அரசன் எனக்கூறப்படும் கிங் கோப்ராவை (King Cobra) பிடிக்க நடுங்குவார்கள்.
ஏனெனில் .. கிங் கோப்ரா என்பது மலைபாம்பு போல மிக பெரியது கிடையாது, ஆனால் மிக கொடிய விஷம் கொண்டது மற்றும் மிகவும் சுறுசுறுப்பானது. நீங்கள் அதைப் பிடிக்கும்போது, உங்கள் கவனம் முழுவதும் அதன் மீது இருக்க வேண்டும். சற்று கவனக்குறைவாக இருந்தாலும், அது உங்களை கடித்து விடலாம்... தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி (Viral Video) வருகிறது.
அந்த வீடியோவில், கழிவறைக்குள் நுழையும் பாம்பின் வாலை பிடித்து பாம்பு பிடி வீரர் அசோக் இழுக்கையில், அது எதிர்பாராத விதமாக, திடீரென மின்னல் வேகத்தில் அவரை கொத்த சீறி படமெடுத்தது. சுதாரித்துக்கொண்ட அவர், நூலிழையில் உயிர் தப்பினார். அந்த ராஜ நாகம் (King Cobra) சுமார் 14 அடி இருக்கும். அதை பார்க்கும் போது பார்க்கும்போது ... நமக்கே ஒரு வித பயம் ஏற்படுகிறது.
ALSO READ | Snake Poison as Covid Drug: பாம்பின் நஞ்சு, கோவிட் தொற்றுநோய்க்கு சிறந்த மருந்தாகலாம்!
அந்த வீடியோ குறித்து நாங்கள் சொல்வதை விட நீங்களே பாருங்கள். இந்த வீடியோவை (King Cobra Video) பார்த்தால் உங்கள் இதயம் சில நொடிகள் வேகமாக துடிக்க ஆரம்பிக்கும்.
How not to rescue a snake. Especially if it’s a king cobra. Via @judedavid21 pic.twitter.com/yDJ5bLevQf
— Parveen Kaswan (@ParveenKaswan) September 7, 2021
அந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "பாம்புகளை, குறிப்பாக கிங் கோப்ராவை பிடிக்கக் கூடாது" என்ற தலைப்புடன் பகிர்ந்த வீடியோ, சில மணிநேரங்களில் வைரலாகியது.
கடந்த செவ்வாய்க்கிழமை ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ, இதுவரை சுமார் 3 லட்சம் பார்வைகளை நெருங்க உள்ளது. 2500-க்கும் மேற்பட்ட மறு ட்வீட் செய்துள்ளனர். 15,000-க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது.
ALSO READ | Watch Viral Video: இந்த பாம்பின் வானவில் வண்ணங்கள் உங்களை வசீகரிப்பது நிச்சயம்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR