கோழிக்கோடு: சில வருடங்களுக்கு முன், கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த 28 வயது இஸ்லாமிய பெண்மணி, தனது அழகிய கிருஷ்ணா ஓவியங்களுக்காக மிகவும் பிரபலமானார். ஜஸ்னா சலீம், என்ற அந்த இஸ்லாமிய பெண்மணிக்கு பகவான் கிருஷ்ணரின் ஓவியங்களை தீட்டுவதில் மிகுந்த அர்வம் கொண்டவர். கடந்த ஆறு ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் ஓவியங்களை தீட்டியுள்ளார். இருப்பினும், அவரது நீண்ட கால கனவு இப்போது தான் நிறைவேறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறுதியாக, கோவிலில் அவரது கிருஷ்ணர் ஓவியத்தை சமர்ப்பிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவர் வரைந்த வெண்ணெய் பானையுடன் அமர்ந்திருக்கும் குழந்தை கிருஷ்ணரின் ஓவியம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, பந்தளத்திலுள்ள உலந்து ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலை சேர்ந்த ஒரு பக்தர் குழு தொடர்பு கொண்டு. ஞாயிற்றுக்கிழமை, பத்தனம்திட்டா மாவட்டத்தின் பந்தளம் அருகே உள்ள உலந்து கிராமத்தில் உள்ள ஒரு கிருஷ்ணர் கோவிலில் அவர் தனது ஓவியத்தை அர்ப்பணித்தார்.


ALSO READ | Viral Video: பிரபல மகாபாரத பாடல், சுலோகங்களை பிசிறில்லாமல் பாடும் இஸ்லாமியர்


"கிருஷ்ணஅரை தரிப்பதும், என் ஓவியத்தை பகவானிடம் சமர்பிப்பதும் எனது நீண்ட கால கனவு. பந்தளத்தில் உள்ள உலந்து ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில், எனது விருப்பம் நிறைவேறியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை. கோவில் அதிகாரிகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், ” என்று ஜஸ்னா கூறினார்.


இரண்டு குழந்தைகளின் தாயான ஜஸ்னா, ஓவியம் வரைய பயிற்சி ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி நாட்களில் கூட ஆசிரியர்கள் ஏதேனும் வரையும் படி கூறினால் கைகள். ஆனால், அவர் கர்ப்பமாக இருந்த காலத்தில் விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்பிற்கு பிறகு குணமடைந்து கொண்டிருந்த போது தற்செயலாக, பொழுது போக்கிற்காக வரையத் தொடங்கியதாக அவர் கூறினார்.


"என் குழந்தை பருவத்தில் என் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னை கண்ணா என்று அழைப்பார்கள். நான் ஒரு முறை செய்தித்தாளில் குழந்தை வடிவத்திலான பகவான் கிருஷ்ணரை பார்த்த பிறகு, அவர் மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டு வரையத்தொடங்கினோன். ஓவியம் மிக நன்றாக வந்திருந்தது, ”என்று அவர் கூறினார்.


தன பகவான் கிருஷ்ணரின் ஓவியத்தை வரைய தொடங்கிய காலத்தில் அவர் தனது ஓவியங்களில் ஒன்றை தனது இந்து நண்பருக்கு பரிசளித்தார். அவர் அதை பூஜை அறையில் வைத்திருந்த நிலையில், வீட்டில், சாதகமான வகையில் நல்ல மாற்றங்கள் நிகழத் தொடங்கின. இப்போது ஜஸ்னா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கிருஷ்ண பகவான் ஓவியத்தை பரிசளிக்க வேண்டும் என விரும்புகிறார்.


ALSO READ | விஞ்ஞானிகளுக்கும் புதிராக உள்ள பங்களாதேஷின் அதிசய சிவன் கோவில்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR