வைரல் செய்திகள்: தமிழ்நாட்டில் நடந்த ஒரு வேடிக்கையான சம்பவம் வெளிசத்துக்கு வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குடலூருக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் தமிழக அரசாங்கத்தால் நடத்தப்படும் டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 12 ஒயின் பாட்டில்களை எலிகள் காலி செய்தன. COVID-19 தொற்று காரணமாக கடைகள் சிறிது காலம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், ஒவ்வொரு பகுதியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன் அடிப்பிடையில் திங்களன்று கடம்புழாவில் உள்ள டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறந்தபோது, அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.


ALSO READ |  ஆன்லைன் வகுப்பில் உடலுறவில் ஈடுபட்ட மாணவர் வீடியோ வைரல்! விளைவு என்ன?


12 ஒயின் பாட்டலை காலி செய்த எலிகள்:
இந்த அதிர்ச்சிக்கு காரணம், 12 குவாட்டர் மதுபான பாட்டில்களின் மூடிகள் திறந்திருப்பதைக் கண்டனர். எப்படி பாட்டில் மூடி திறக்கப்பட்டது என ஆராய்ந்த போது ஒயின் பாட்டிலில் எலிகள் கடித்த அடையாளங்கள் இருந்தன மற்றும் எலிகள் தான் பாட்டிலை காலி செய்து இருக்கும் என அதிகாரிகள் ஒரு முடிவுக்கு வந்தன்ர். 


மேலும் இதுக்குறித்து தகவல் அனுப்பியதும், டாஸ்மாக் கடை (Tasmac shop in Tamil nadu) மேற்பார்வையாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கடைக்குள் எலிகள் இருப்பதையும், அது தான் ஒயினை குடித்திருக்க வேண்டும். மற்ற தடயங்கள் எதுவும் இல்லை என அவர்கள் தெளிவுப்படுத்தினர். இந்த பாட்டில்களின் விலை சுமார் 1,500 ரூபாய் என்று கூறப்படுகிறது.


ALSO READ |  45 வயதிலும் செம ஹாட் என ரசிகர்கள் ஆரவாரம் - பிகினி போட்டோவை ரீலிஸ் செய்த நடிகை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR