உலகின் மிக சிறிய ஹம்மிங் பறவை என சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வந்த புகைப்படம் உண்மையாக பறவையின் புகைப்படம் இல்லை என தெரியவந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபக காலமாக சமூக ஊடகங்களில் மிக சிறிய ஹம்மிங் பறவை இதுதான் என பகிரப்பட்டு வந்திருப்பதினை பார்த்திருப்போம். பலமுறை நம் விழிகளை இந்த பதிவு கடந்து சென்றிருக்கலாம்.


சிறிய மரக்குச்சியினை மனித விரல்கள் தாங்கிருக்க, அந்த குச்சியில் ஒரு சிறு ஹம்மிங் பறவை அமர்ந்திருக்கும். இந்த புகைப்படம் தான் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்ட புகைப்படம்.



இந்த புகைப்படத்தினை Observe என்னும் முகப்புத்தக கணக்கில் முதல் முதலாக பிரஞ்ச் நாட்டவர் பதிவிட்டுள்ளார். உலகின் மிக சிறிய குருவி என குறிப்பிட்டு இந்த பதிவினை பகிர்ந்துள்ளார். இந்த பதிவானது இதுவரை 37,000-க்கும் மேல் உலக அளவில் பகிரப்பட்டுள்ளது. 2.2k லைக்ஸ்களை குவித்துள்ளது.


ஆனால் இது உண்மையான பறவை இல்லை எனவும், நயன் மற்றும் வைஷாலி என்னும் இரு கைவினை கலைஞர்கள் உருவாக்கிய காகித பறவை என்றும் பிரஞ்சு நாட்டை சேர்ந்த பத்திரிக்கையாளர் கண்டறிந்துள்ளார். 



ஆரம்பத்தில் இந்த புகைப்படம் வைரலானதை விட தற்போது மேலும் அதிகமாக வைரலாகி வருகின்றது...